நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...
Tag - ஜே.வி.பி
கடந்த பதினான்காம் தேதி நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கருத்துக் கணிப்பாளர்களும் எதிர்பார்க்காதது நடந்தது. எந்தவொரு அரசியல் விமர்சகர்களும் கனவு கூடக் காணாத ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுபத்தொரு சதவீத வாக்குகளைப் பெற்று மொத்தம் இருநூற்று...
அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...
இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர்...
“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர்...
கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கச்சேரிக்கான சகல ஏற்பாடுகளும் ஆகஸ்ட் 15ம் தேதி வேட்பு மனுத்தாக்கலுடன் ஆரம்பமாகிவிட்டன. மொத்தம் முப்பத்தொன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எதற்கு இத்தனை பேர் என்று ஆச்சர்யமாய் இருக்கிறதா? அப்படித்தான். தேர்தல் திணைக்களத்தைக் கடக்கும் போது பையில் ஐம்பதாயிரம் காசு...
இந்த வாரத்துடன் ஜனாதிபதி ரணிலுக்கும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சேவுக்குமிடையில் தேர்தல் உடன்பாடு தொடர்பாய் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. இப்படியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதனால் ரணிலின் வயிறுதான் ஒரு சுற்றுப் பருத்துப் போகிறதே தவிர கண்ட பலன் எதுவுமில்லை. மறு...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...