ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க் காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதுவும் ஆசியக் கண்டத்தில் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என்ற கணக்கில் போர்கள் அதிகரிக்கின்றன. இந்த...
Tag - உலகம்
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில் உருவாக்க முடியாது என்பதே இதன் அர்த்தம். இப்பழமொழி உலகில் உருவாக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். இன்று நாம் சர்வ சாதாரணமாகத்...
“ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத் தொல்லை செய்து, கோஷமெழுப்புகிறது ஒரு ரஷ்யக் கும்பல். அங்கிருக்கும் யாருக்கும் இதுபற்றிக் கவலையில்லை. அவரவர் வேலையைப் பார்த்துச் சென்றனர். கடந்த மாதம்...
நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து முப்பதாண்டுகள் கடந்தும் இன்னும் கிடைக்கப் பெறாமல் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணம்… நிறவெறிச் சட்டம். இதற்கெல்லாம் சட்டமா? ஆம். தென்னாப்பிரிக்கா...
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு நடக்கும் மக்கள் வாக்கெடுப்பு என்பதாலும், வழக்கமான இலங்கைத் தேர்தல்களுக்குரிய கல்யாண குணங்களான இனவாதமும், மதவாதமும்...
சகுரா மலர்களுக்கொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஜப்பானின் தெருக்களை இருவாரங்களுக்கு ‘பேபி பிங்க்’ வண்ணத்தில் திளைக்க வைத்தாலும், இம்மலர்களின் வர்ணம் அதுவன்று. அவை நிறமற்ற கண்ணாடி மலர்கள்! சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் விதத்திலேயே அவை இளஞ்சிவப்பாகத் தெரிகின்றன. ஜப்பானை நினைத்தாலே இந்த மெல்லிய மலர்கள்...
பசியாலும் பஞ்சத்தாலும் நிலைகுலைந்த எத்தியோப்பியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க தேசத்துக் குழந்தைகளின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். எலும்பும் தோலுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வெகு விரைவில் ஆப்கனிஸ்தான் குழந்தைகளும் இப்படி ஆக வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தான்...
ஜன்னலோரம் இருந்த கைக்குழந்தைகளின் தொட்டில்களை, அறைக்கு நடுவே அவசரமாக நகர்த்துகிறார்கள். அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிலிருந்த எல்லாத் தொட்டில்களையும் அறையின் நடுவே வட்டமாக நெருக்கப்படுத்துகின்றனர். மூன்று செவிலியர்கள் வெளிப்புறமாக அதைச் சுற்றி நின்று, கை எட்டும் தூரம்வரை நீட்டி, தொட்டில்களை...
உலகத்தில் 64 நாடுகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. சில நாடுகளில் சமீபத்தில் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள், ஐநூறு கோடி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். மக்களாட்சி அமைப்பின் சக்தியை எண்ணி மகிழ்ச்சியடையத் தோன்றுகிறதல்லவா? ஆனால், மக்கள்...
வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு நிறுவனத்தின் ஏழு உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டதற்கு இரண்டு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேல் அரசு. இன்னும் சிலரைக் கண்டித்துள்ளது. பைடன்- நெதன்யாகு. இருவரில் யார் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது. அந்த...