பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
Tag - விளாதிமிர் புதின்
உக்ரைனின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யாவின் குண்டுகள் தகர்த்தெறிவதைக் கண்டு உலகமே பதைத்திருக்கும் வேளையில், ரஷ்ய அதிபர் புடினைக் கட்டி ஆரத்தழுவிப் புளகாங்கிதமடைகிறார் பாரதப் பிரதமர் மோடி. கைகளில் இருந்த ஐவியுடன் சிதறிப்போன உடல்களும் இரத்தம் நிறைந்த முகங்களுடனான குழந்தைகளின் உடல்கள் ஒரு...
“அண்ணா, கார்ல ஏறுங்க அண்ணா.” “இல்ல தம்பி, நீங்க முதல்ல ஏறுங்க.” “உங்களுக்கு முன்னாடி எப்டிங்கண்ணா, நீங்க முதல்ல ஏறுங்க.” “சரி வாங்க தம்பி, ரெண்டு பேருமே ஏறுவோம்.” ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம்மும் இப்படித்தான் பேசியிருப்பார்கள். கதிரவன்...
வெளிநாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி பெரும் தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு நடுத்தெருவில் கழற்றிவிடும் ஏஜென்ஸிகளை எத்தனையோ சினிமாக்கள் காட்டியிருக்கின்றன. நம்பகமற்ற நபர்களின், ஏஜென்ஸிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி உடைமைகளையும், சொத்துக்களையும் விற்று, குடும்பத்தை நிர்க்கதியாக்கிவிட்டு...
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...
25 – கெட்டவனுக்குக் கெட்டவன் 24-பிப்-2022. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் தாக்குதல் ஆரம்பமானது. பிரம்மாண்ட ஆன்டோனோவ் விமான நிலையத்தின் மீது விழுந்த முதல் குண்டு அல்ல. ஒன்றரை அடிப் பெட்டிபோல இருக்கும் வையசாட் KA-SAT மோடம்கள் மீது நடந்தது. உக்ரைனின் ஆயிரக்கணக்கான இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தகவல்...
“எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள் நுழைந்தார்கள். எதுவும் பேசாமல் குறிபார்த்து மக்களைச் சுட்டார்கள். சுடும் சத்தத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஒன்றும் புரியவில்லை. நிஜமாகவே அதிர்ஷ்டம்...
24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...
ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று உண்டு. விமானத்திலிருந்து வீசப்பட்ட பின்பு எந்தக் கட்டுப்பாடுமின்றி, தன்பாட்டுக்கு நினைத்த இடத்தில விழுபவை முட்டாள் குண்டுகள். ஒரு முட்டாள் குண்டிற்கு...
“முயற்சியைக் கைவிடாதீர்கள். நல்லவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே, தீமை வெல்வதற்குப் போதுமானதாகிறது. அதனால்தான் சொல்கிறேன், செயல்படாமல் இருந்து விடாதீர்கள். என்னைக் கொல்ல முடிவு செய்கிறார்கள் என்றால், நாம் அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று பொருள். தவறு செய்பவர்களால் ஒடுக்கப்படும்...