உக்ரைன் போருக்கான முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மார்கோ ரூபியோவும், செர்கேய் லாவ்ரோவும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் கூட்டத்துக்கு உக்ரைன் தரப்பு அழைக்கப்படவில்லை. அதனாலோ என்னவோ அமெரிக்காவும்...
Tag - ரஷ்யா
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா உக்ரைன் போர் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சவூதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின்...
‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா. போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில்...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...
“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...
ரசம் வைக்க முடிவு செய்கிறீர்கள். அட, தாளிக்கக் கருவேப்பிலை இல்லையா? கவலை வேண்டாம். ஸெப்டோவில் ஆர்டர் செய்து விட்டு, புளியை ஊற வைப்பதில் தொடங்கி ரசத்திற்குத் தேவையானவற்றைக் கூட்டிச் சேருங்கள். நீங்கள் தாளிப்புக்குத் தயாரானவுடன் கருவேப்பிலையும் வந்து சேர்ந்துவிடும். எட்டு அல்லது பத்து நிமிடங்களில்...
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் கூட்டத்தின் முதல்நாள். அமெரிக்க அதிபர் பைடன் தன் கடைசி உரையை நிகழ்த்தினார். தன் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உலகிற்குச் செய்தவற்றை, செய்யப்போகிற காரியங்களைச் சொல்லி மகத்தான அந்த உரையை முடித்தார். அமைதியும்...
ஆர்டிக் கடல் பிரதேசத்தில் அலாஸ்காவிற்கு வடக்கே, பெரிங் கடல்( Bering Sea) பகுதியில் சீனாவின் இரண்டு சின்ன கப்பல்களையும் ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய க்ரூசைரையும் ( missile cruiser) பார்த்துத் திகைத்துப் போய் இருக்கிறது அமெரிக்கா. நமக்கு பிடிக்காத யாரோ ஒருவர் நாம் வாழும் தெருவின் கோடியில் ஒரு வீடு...
உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் லெ போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்தது. ஃபிரான்ஸ் நாட்டுச் சட்டங்களின்...