31. வாங்கலாமா, வேண்டாமா? ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ஒரு வரியைக் கேட்டிருப்பீர்கள். இது எவ்வளவு பொருத்தமான உவமை என்பது உண்மையில் கடன்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அந்தக் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த இயலாமல் தடுமாறியவர்களுக்குத்தான் தெரியும்...
Tag - பணம் தொடர்
30. ஆனைக்கொரு கணக்கு, பூனைக்கொரு கணக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வறுவல் பொட்டலத்துக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று சலுகை அறிவித்திருந்தார்கள். அந்த வறுவல் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் இரண்டும் இரண்டும் நான்கு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்...
29. நம்முடைய காரணம் என்ன? பூங்காவில் மாலை நடையின்போது நான் அடிக்கடி சந்திக்கிற நண்பர் அவர். பெரிய வங்கியொன்றில் மேலாளராகப் பணியாற்றுகிறார். வருவாய் அடிப்படையில் பார்த்தால், உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர். ஒருநாள், அவருடைய மகன் அவரிடம் வந்து, தயங்கித் தயங்கி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறான்...
28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...
27. தள்ளுபடித் தந்திரங்கள் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த...
26. படைத்தலைவர் ஆவோம் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 23. அதையே ஒரு லிட்டர் பாக்கெட்டாக வாங்கினால் 23 + 23 = ரூ. 46 இல்லை, ரூ. 45தான். இதன் பொருள், ஒருவேளை உங்கள் வீட்டுக்கு நாள்தோறும் ஒரு லிட்டர் பால் தேவைப்படுகிறது என்றால், அதை இரண்டு அரை லிட்டர் பாக்கெட்களாக வாங்குவதற்குப்பதிலாக ஒரு...
25. எந்த விலை நல்ல விலை? எங்கள் வீட்டருகில் ஓர் உணவகம். அதில் மூன்று பிரிவுகள்: * முதல் பிரிவு, Self Service, அதாவது, நமக்கு நாமே திட்டம். உணவைப் பரிமாறுவதற்கெல்லாம் யாரும் இருக்கமாட்டார்கள். சமைக்கும் இடத்துக்கு அருகில் சென்று நாமே உணவை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்தத் தட்டை வைத்துச் சாப்பிடுவதற்கு...
24. ஒழுங்கற்ற செலவுகள் நாம் மாதந்தோறும் செய்கிற செலவுகள் பெரும்பாலும் நம்முடைய அந்தந்த மாதச் சம்பளம் அல்லது மற்ற வருவாயிலிருந்து செல்கிறவையாக இருக்கும். அதனால், இதற்கு இவ்வளவுதான் செலவாகும் என்று அவற்றை முன்கூட்டியே ஊகிப்பதும், திட்டமிடுவதும், பெரிய சிக்கலின்றிச் செலவுசெய்வதும் எளிது. ஆனால்...
22. செலவுகள் பலவிதம் ஒரு திருமணத்துக்கு நூறு பேர் வருகிறார்கள் என்றால், அந்தத் திருமணத்தை நடத்துகிறவர்கள் அந்த நூறு பேரையும் ஒரே மாதிரியாகத்தான் கவனிப்பார்களா? கண்டிப்பாக இல்லை. அவர்கள் சிலரை இயல்பாக வரவேற்பார்கள், சிலரை இன்னும் கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்கள், வேறு சிலரை விழுந்து...
21. நெருக்கடி நேர நிதி வரும் நவம்பர் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பல போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கெனச் சுமார் 16 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். 16 பேரா? பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் 11 பேர்தானே விளையாடுவார்கள்? கூடுதலாக 5 பேர் எதற்கு...