65. பேச்சைக் குறையுங்கள்! நாம் இன்றைக்குத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்கும் மாநிலம் இந்தியா விடுதலை பெற்றபிறகு உருவானதுதான். அதற்குமுன்னால், அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது மாநிலங்களுக்குப் பதில் மாகாணங்கள்தான் (Provinces) இருந்தன. எடுத்துக்காட்டாக, இப்போதைய தமிழ்நாட்டின்...
Tag - நாள்தோறும்
65. விபூதி யோகம் வானுக்கும் பிருத்விக்கும் இடைப்பட்ட வெளியினைப் போல மனம், இருப்பது தெரியாதிருக்க வேண்டும். சூனியமல்ல. பேரொளியுமல்ல. உள்ளபடியே இருப்பது. அப்படித்தான் அது இருக்க வேண்டுமென்று எப்போதும் நினைப்பேன். தியானத்தில் அமரும்போது எண்ணியவண்ணம் மனத்தைக் குவித்துவிட்டுப் பிறகு எண்திசைக்கும் பறக்க...
64. காப்பு அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச் சுற்றித் திரியலாம் என்று விடிந்தபோதே தோன்றியது. ஒரு விதத்தில் அப்படியொரு தனித்த பயணம் அவசியம் என்று நினைத்தேன். வித்ருவுக்கு வந்த நோக்கம் ஒன்றாகவும்...
64. சீர்திருத்தம் தொடங்கும் இடம் 1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில் வசித்துவந்தார்கள். காந்தியின் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அவர்களோடு தங்கியிருந்தார்கள். இந்தப் பணியாளர்களுடைய சாதி, மதம் போன்றவற்றைக் காந்தி பொருட்படுத்தவில்லை...
63. உதிர்த்தவன் இன்னொரு மனிதனின் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில் இருப்பதே அத்தருணத்தில் என் மனநிலைக்குச் சரியென்று தோன்றியது. அதன் பொருட்டே சாரன் வித்ருவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு ருத்ர மேருவுக்கு வந்தேன். எனக்குத் தெரியும். இடையூறுகளற்ற தவத்தின் பொருட்டு ரிஷிகள் அங்கே வருவார்கள். சிறிய...
63. கேட்க விரும்பாத விஷயங்கள் மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் காந்தி தாழ்த்தப்பட்டவர்கள் நலனைப்பற்றி இவ்வளவு தீவிரமாகப் பேசியது ஏன்? அதற்கென இந்து மதத்தையே பகைத்துக்கொள்வேன் என்று முழங்கும் அளவுக்கு அவர் உணர்ச்சிவயப்பட்டது ஏன்? முந்தைய நாள் தரங்கம்பாடியில் காந்தியைச் சந்தித்துப் பேசிய தாழ்த்தப்பட்ட...
62. மாயவரத்தில் மகாத்மா ஏப்ரல் 29 அன்று, சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள இலட்சுமி நினைவு ஆர்ய பாடசாலை என்ற பள்ளிக்குக் காந்தியும் கஸ்தூரிபா-வும் வந்தார்கள். அந்தப் பள்ளிக்குக் கொடையளித்து நடத்திவந்த சி. இராமாஞம் செட்டியாரும், ஜார்ஜ் டவுன் பகுதிப் பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளரான என்...
62. இடக்கண் நான் தனித்திருக்கிறேன். அலை புரண்டோடும் சரஸ்வதியின் கரையில் அதே நியக்ரோதத் தருவின் அடியில்தான் அமர்ந்திருக்கிறேன். கிளிகளும் குருவிகளும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து சத்தமிடுகின்றன. உழைத்துக் களைத்து வீடு திரும்பும் உழவர்கள் அலுப்பில் சிறிது ஓய்வெடுக்க என்னருகே அமர்கிறார்கள்...
61. சுத்தி ஒரு குன்றினைப் போல அடர்ந்து கவிந்திருந்த நியக்ரோதத்தினடியில் ரிஷி ஆசனமிட்டு அமர்ந்திருந்தான். அவனது இரு புருவங்களுக்கு நடுவில் உயர்ந்து பொலிந்த அக்னி பஸ்மத்தையே நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நதி தொட்டு வந்து மோதிய காற்றில் அவனது சடாமுடியும் தாடியும் தருவின் மேற்புறக் கிளைகளைப்...
61. ஒரு நிமிடம் கொடுக்கிறேன் சென்னைக்கு வந்திருந்த காந்திக்குச் சிறு உதவிகளைச் செய்வதற்காகச் சில இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், கே. சுவாமிநாதன். அத்தனைப் பேரில் இவரைமட்டும் தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. பின்னாட்களில் இந்தப் பேராசிரியர் சுவாமிநாதன் காந்தியின்...