19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...
Tag - தொடரும்
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...
18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944) தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள்...
குடும்பத் தலைவன் ஒரு கணினியைப் பயன்படுத்திய அனைவரும், எந்தத் தலைமைமுறையைச் சேர்ந்தவராயினும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றையாவது பயன்படுத்தியிருப்பார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வீட்டுக்குள் வரும்போது அவரது தொழில்ரீதியான அனைத்தையும்...
டிசிஆர் தெரபி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சென்ற அத்தியாயத்தில் பார்த்த டிஐஎல் எனப்படும் சிகிச்சை முறை ஒரு முக்கிய மைல்கல். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சற்று முதிர்ந்த நிலையில் உள்ள தோல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையில் இதன் பங்கு இன்றியமையாதது. இருப்பினும் இந்த வகைச் சிகிச்சையில் உள்ள...
44. கட்சிக்குள் கலகம் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியின் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றிருந்தபோதிலும் அங்கேயும் இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற்று, இந்தியா விடுதலை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ஜவஹர்லால் நேரு. அவருடைய முயற்சிகளை காந்திஜி...
தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...
43. பிரஸ்ஸல்ஸ் மாநாடு டாக்டர்களின் ஆலோசனைப்படி, ஜவஹர்லால் நேரு, தன் மனைவி கமலாவைக் காசநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போவதற்குத் திட்டமிட்டிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேருவுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கமலா...
அடாப்டிவ் செல் சிகிச்சை (Adoptive Cell Therapy or ACT) இம்யூனோதெரபியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு வகைச் சிகிச்சை முறை இந்த அடாப்டிவ் செல் சிகிச்சை (ஆக்ட்). இந்த வகை இம்யூனோதெரபி சிகிச்சை முறை மூன்று வகையாகத் தயாரிக்கப்பட்ட டி-செல்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அளிக்கப்படுகின்றது. அவை (அ) டியூமர்...
17 – தணிகைமணி வ.ச.செங்கல்வராய முதலியார் (15.08.1883 – 25.08.1972) ‘தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்’ என்ற நூற்தொகுதி தமிழிலக்கிய உலகில் புகழ்வாய்ந்தது. தமிழின் சிறந்த மொழியியல் மற்றும் பக்திநெறிக் காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள். அந்தப் பன்னிரு திருமுறைகளில் மூவர் தேவாரம் என்பது இன்னும்...