வீட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், நெருங்கிய உறவுத் திருமணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள வரும் கணவன் மனைவியர் எப்படிக் கவலை மறந்து சிரித்துக் கலகலப்பாய் திருமணத்தை நடத்தி வைப்பதில் மும்முரமாக ஈடுபடுவார்களோ அதுபோலவேதான் கிட்டத்தட்ட இந்த முறை இந்த G7 உச்சி மாநாடும் (summit) கூடியிருக்கிறது...
Tag - உலகம்
நவீன பனிப்போர் எதை அடிப்படையாக வைத்து நடக்கிறது? எந்த நாட்டிடம் அதிசிறந்த ஏ.ஐ. ட்ரோன் ஆயுதம் இருக்கிறது என்பதை வைத்துதான். தற்சமயம் கிட்டத்தட்ட பதினோரு நாடுகள் இந்த ட்ரோன்களை வைத்து உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சீனா இந்த இரு வாரங்களில் காட்டிய ட்ரோன் வித்தைகள் ஏராளம். தான் கெட்டது...
ரஷ்யாவுக்கு உக்ரைன் ஒரு ஓமப்பொடிப் பொட்டலம். இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் ஒரு பக்கோடா பொட்டலம். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளுக்கும் சிரியா ஒரு சிப்ஸ் பாக்கெட். பொழுதுபோக்காக மென்றுகொண்டிருக்க ஏதோ ஒன்று வேண்டியிருக்கிறது என்று எளிதில் கடக்க இயலாது. சிலருக்கு யாரையாவது எப்போதும் பதற்றமாகவே...
கன்னித் தீவு தொடர்கதையாகத் தொடர்கிறது, ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள். இம்முறை ஜி7 மாநாட்டையொட்டி, செமிகண்டக்டர்கள் போன்ற இன்னும் பல முக்கியத் தொழில்நுட்பப் பொருட்கள் மீது சிறப்புத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே சீனா, மத்தியக் கிழக்கு நாடுகளின் வங்கிகளும், மின்னணு நிறுவனங்களும்...
இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வருமா, அல்லது பாராளுமன்றத் தேர்தல் வருமா என்ற பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கும் போது, எதிலும் சுவாரசியமில்லாத ஒரு கூட்டம் ‘சரி தேர்தல் வருமா?’ என்று கேட்டுக் கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் வருமா என்று கேட்பவர்கள் இரண்டு தரப்பினர்...
கறை நல்லது என்கிறது கறை நீக்கும் திரவத்தை உருவாக்கிய நிறுவனம். போர் நல்லது. எதிரியை நீக்கிப் பாதுகாப்பாக வாழப் போர் ஒன்றுதான் வழி என்கிறது, போர் செய்யும் அரசாங்கம். இவற்றில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை அல்லவா? இதைப்போன்ற முரண்பட்ட விஷயங்களை நம்பவைத்து, முடிவில் தற்சார்பற்ற உண்மையை மறக்க...
துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள். இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும்...
இந்தியா அல்லது இந்தோனேசியா போல மிகப் பெரிய ஜனநாயகம் என்று கொண்டாடப்படும் தேர்தல் இல்லை மெக்சிகோ தேர்தல். ஆனால் இது ஒரு முக்கிய தேர்தல். ஆண்கள் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் பரபரப்புகளில் சப்தமே இல்லாமல் ஆளும் கட்சி எதிர்க் கட்சி இரண்டுமே பெண் வேட்பாளர்களை அதிபர் தேர்தலுக்குக் களம் காண...
கோவிட் என்றொரு தொற்று வந்து உலகையே அச்சுறுத்திச் சென்றதை நாமனைவரும் ஒரு கெட்ட கனவாக எண்ணிக் கடந்துவிட்டோம். சகஜமான வாழ்க்கைக்குத் திரும்பி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. “எல்லாம் இப்படியே போக வேண்டும் என்றால் எங்கள் பேச்சைக் கேளுங்கள்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் கூறியுள்ளார்...
“நீ சொல்வது போல முப்பது வருடங்கள் உன் கணவர் இங்கு வேலை செய்ததற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. ஆகையால் இழப்பீடு எதுவும் தருவதற்கு இல்லை” என்ற நில உடைமையாளரின் பதிலில் உடைந்து போனார் ம்யேசா. அப்போதுதான் கணவர் இறந்து ஈமச்சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த எதிர்வினை அவருக்குத் துன்பத்தைத்...