அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா ஹாரிஸ். முன்னொருமுறை ஹிலரியும் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்றாலும், ஹிலரியைவிட மக்களுக்கு அதுவும் விளிம்புநிலை மக்களுக்குக்...
Tag - உலகம்
இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும்...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக் என்பது விவகாரம். அதை ஓர் இளவரசி செய்ததுதான் பரபரப்புக்குக் காரணமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் துபாயின் அரசராகவும் ஷேக் முஹம்மது...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும் ஒரு ஃபோட்டோ வைரலானது. அது ஏன், நீச்சல் தடாக ஃபோடோவிற்கு இத்தனை மகிமை..? உண்மையில் இந்த நீச்சல் தடாக கசமுசாவின் பூர்வீகம் இலங்கை ஜனாதிபதி மாளிகை...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறான். அவனை மடக்கி விசாரிக்கிறார் வைஸ்-பிரின்சிபல். தோள்பையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் துணை முதல்வரை எகிறி எகிறி அடிக்கிறான் அந்தச்...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல் சமாளித்துக்கொண்டிருக்கிறார். பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, காதில் காயம், சுட்டவன் சொந்தக் கட்சிக்காரனே என்கிற விவரம் என்று அந்தப் பக்கம் ஆட்டம்...
இணையம் தகவல்களை எல்லோருக்கும் திறந்து வைத்திருக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சாத்தியம் விரல் நுனியில் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றன. இதெல்லாம் உண்மைதான். ஆனால் உண்மையான அதிகாரம் எப்போதும் ஆட்சியாளர்களிடத்தில்தான்...
“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின்...
மறதி நோய் வருவதற்கு வயதாகித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. பலருக்கு நடுவயதிலேயே 40, 50 வயதுகளிலேயே கூட வருவதுண்டு. வயதானவர் என்று சொல்வது தகாது, அனுபவம் மிக்கவர் என்றே அழைக்க வேண்டும் என்று பாடம் எடுக்கக் கூடிய அமெரிக்காவில்தான் விவாதத்திற்கு முன்னரே, நிக்கி ஹேலியால், “அதிபர் பைடன் எத்தனை காலம்...