ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸருல்லா கொல்லப்பட்டிருக்கிறார். லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். “எங்கள் நீண்டகால எதிரி கொல்லப்பட்ட பிறகு, உலகம் பாதுகாப்பான, வாழத் தகுந்த இடமாக மாறியிருக்கிறது” என்கிறார் இஸ்ரேலின்...
Tag - இஸ்ரேல்
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை. காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான்...
“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள்...
“எவ்வளவு சீக்கிரம் ஆயுத உதவிகள் கிடைக்கிறதோ, அவ்வளவு சீக்கிரம் போர் முடிவுக்கு வரும்.” என்றார் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இரண்டாம் உலகப் போரின்போது அவர் கூறிய இதையேதான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இன்று அமெரிக்காவிடம் கேட்கிறார். “உங்கள் விரைவான உதவிகள்...
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...
இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தாங்கள் சுற்றுலா செல்லும் நாடுகளைச் சுற்றிக் காண்பிப்பது போல இஸ்ரேலைச் சுற்றிக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா. வைரல் ஆனாலும் லைக்ஸ் இல்லை. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட ட்ரோன் விடீயோக்களில் இஸ்ரேல் ராணுவத் தலைமையிடங்கள், குடியிருப்புகள் எல்லாம்...
தாடியும் தலைப்பாகையுமாகக் கருப்புநிற பி.எம்.டபிள்யு. காரில் வந்திறங்கியது அந்த மூவர் குழு. ஒரு மத நீதிபதி, ஒரு அரசு வழக்கறிஞர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர். ஊருக்கு வெளியே அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையின் கைதிகள், இவர்களை மட்டுமே சந்தித்தனர்- கடைசியாக. ஒவ்வொருவராக வரிசையில் வந்தனர்...
மார்ச் மாதத்தில் இருந்தே ராஃபாவில் தாக்குதல் தொடங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தது இஸ்ரேல். தினமும் நடக்கும் தாக்குதல் போலல்லாது முழுவேகத்தில் உள்ளே நுழைந்து தாக்கும் திட்டம் அது. காஸா பாலஸ்தீனியர்கள், வடக்கு முனையில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து தென்கோடியில் உள்ள ராஃபாவில்...