Home » என் கனவை விட்டுச் செல்கிறேன்
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன்

ஓவியம்: ராஜன்

ஓஷோவை அறியும் கலை – 01

மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல் வெளியேறிய அந்த இளைஞர், அறுபதுகளின் தொடக்கத்தில் மும்பைக்குக் குடி பெயர்ந்தார். தமது முப்பது வயதுக்கு மேல் மிகப் பெரிய ஆன்மீக நாட்டம் கொண்டவராக மேடைகளில் உரையாற்றினார். அவருடைய கருத்துகளைக் கேட்டு ஏராளமானோர் மயங்கினர். அவர் ஆச்சார்ய ரஜ்னீஷ் என்றும் பகவான் ரஜ்னீஷ் என்றும் அப்போது அழைக்கப்பட்டார்…

எண்பதுகளின் தொடக்கத்தில் ஒருநாள் நானும் என் நண்பர் சூர்யராஜனும் பிரபஞ்சனின் கே.கே.நகர் வீட்டுக்குப் போனோம். அவர் கையில் பகவான் ரஜ்னீஷ் பதில்கள் என்ற, சிவப்பு அட்டை போட்ட ஒரு புத்தகம் இருந்தது. அதை சூர்யா ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார். நான் அதைப் படிக்க விரும்பவில்லை.

சாமியார்களை எனக்குப் பிடிக்காத காலம் அது. ஓஷோ என்ற பெயர் அப்போது ரஜ்னிஷ் என்றே தெரிந்திருந்தது. பிரபல வார இதழ்களில் கேள்வி பதில்கள் பகுதியில் பிரா பற்றியும் நடிகைகளின் நீச்சல் உடை பற்றியும் கேள்வி வருவதைப் போலத் தவறாமல் செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ் பற்றியும் கேள்வி-பதில் வரும். அதைப் படித்துக் கெட்டுப் போய், ரஜ்னீஷை நிராகரித்திருந்தேன். ஆனால் சூர்யாவின் வற்புறுத்தலால் அரை மனத்துடன் படிக்கலானேன். எனக்குப் புதிதாக ஏதோ புரிவது போலத் தோன்றியது.

அந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்களின் முகவரி திருச்சியில் இருந்தது. திருச்சி நான் சிறு வயதுகளில் வாழ்ந்த ஊர். அங்கு ஒரு வேலையாக இப்போது சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. எனது சிறிய மாமனார் வீட்டுக்கு எதிர் வீட்டில் ரஜ்னீஷ் டைம்ஸ் என்றொரு இதழின் அலுவலகம் இருப்பதைக் கண்டேன். அது தமிழிலேயே வெளியாகிக் கொண்டிருந்த இதழ். சுவாமி மோகன் பாரதி என்பவர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். விலை இரண்டு ரூபாய். டாப்லாய்ட் நியூஸ் பேப்பர் வடிவில் அது இருந்தது. அந்தப் பத்திரிகையின் பல இதழ்களை வாங்கி வந்தேன்.

அப்போது எழுத்தாளர் பாலகுமாரனும் அங்கு வந்து ரஜ்னீஷ் புத்தகங்களை வாங்கிப் போயிருந்தார். பாலகுமாரன் விருந்தினர் ஏட்டில் பகவான் ரஜ்னீஷ் தமது வாழ்க்கையை மாற்றிய மாபெரும் ஞானி என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டேன்.

வாங்கி வந்த ஏடுகளைப் படிக்கப் படிக்க, புதிய பரவசமும் சந்தோஷமும் அளித்தது ஓஷோவின் எழுத்து. படிப்படியாக காரல் மார்க்சும் லெனினும் என்னை விட்டு விலகிப் போனார்கள். எனக்குள் இருந்த கம்யூனிசப் பேயை…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்உங்கள் எண்ணம்

  • மிகச்சிறந்த அறிமுக கட்டுரையை வழங்கியுள்ளீர்கள்.வரும் வாரங்களில் இன்னும் ஆழமாக விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள்…

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!