Home » ஒரு குடும்பக் கதை
தொடரும்

ஒரு குடும்பக் கதை

நேரு குடும்பம்

இந்திய அரசியல், இன்று வரை தவிர்க்கவே முடியாத நேரு குடும்பத்தின் அரசியல் வரலாறு.

அத்தியாயம் 1

இன்றைய தேதியில் பதவியைப் பிடிக்க விரும்புகிற, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் ஆபீஸ் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுடன் சரி. அதைச் சாதித்துக் காட்டியவர் அவர்தான். கடந்த பொதுத் தேர்தல்களில், மேற்கு வங்காளத்தில் மம்தாவும் தமிழ்நாட்டில் ஸ்டாலினும் முதலமைச்சர்களாக வியூகம் வகுத்ததும் அவர்தான்.

அப்படிப்பட்ட பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் சேரப் போவதாகச் செய்தி வந்தது. அதற்கு முன்னோட்டமாக, அவர் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியூட்டுவதற்கான திட்டம் ஒன்றை சோனியா காந்தியிடம் முன் வைத்தார். அவருக்குக் கட்சியில் சேரவும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பி.கே. அளித்த செயல்திட்டம் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற தகவல் வந்த சூட்டோடு சூடாக, பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

பிரஷாந்த் கிஷோரின் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சித் திட்டத்தை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், எழுபது வயதுக்கு மேற்பட்ட கட்சிக்காரர்கள் அனைவரையும், கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி விட்டு, இளைய தலைமுறையினருக்குக் கட்சியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற தனது ஐடியாவை செயல்படுத்தினாலே போதும் என ராகுல் சொல்லிவிட்டதுதான். இது காங்கிரஸ் வட்டாரம் முழுதும் பேசப்படும் விஷயம்.

ஆனால் ராகுல் ஏன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்குகிறார்? ஒப்பீட்டளவில் அவர் இளைஞர்தானே?

தலைமைப் பொறுப்பை வலிய ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி, ஒரு கட்டத்தில் தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டி, அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரே! அதன்பின் தலை இல்லாத கட்சியாக இருந்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை விட்டால் வேறு நாதியில்லை என்று கெஞ்சிக் கூத்தாடியபோது, அவர் இடைக்காலத் தலைவராக இருக்க முன்வந்தது ஏன்? அது வேண்டாம் என்று அன்றைக்கு ஏன் ராகுலால் சொல்ல முடியவில்லை? சோனியா என்ன இள ரத்தமா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!