Home » ஆபீஸ் – 85
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 85

85 ஆளுக்குப் பாதி

அப்துல் ரஸாக் என்றோ அல்லது அதைப்போல ஒரு பெயரையோ சொல்லியிருந்தான் நடேஷ். அதுவேறு நினைவில் தங்காமல் அலைக்கழித்தது. நிறையக் குல்லாக்கள் குறுக்கும் நெடுக்குமாய் போய்வந்து கொண்டிருந்த மசூதி தெருவில் போய் பாய் கடை எது என்று எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது.

‘இங்க லேமினேஷன் போடற கடை எது’ என்று முதலில் தென்பட்ட முஸ்லிம் பெரியவரிடம் கேட்டான்.

‘படத்துக்கா புக்குக்கா’ என்று அவர் பதில் கேள்வி கேட்டார்.

‘புக்குக்கு’

‘அதோ அந்த பிரெளன் கலர் தூண் இருக்கிற, மஞ்சள் சுண்ணாம்பு அடிச்ச வீடு இருக்கு பாருங்க. அதான்’ என்றார்.

அங்கிருந்த போர்டைப் பார்த்ததும் யுனைட்டெட் என்று ஆரம்பிக்கிற பெயரைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

‘எதையுமே சரியாகக் காதில் வாங்கிக்கொள்ளாமல் இவ்வளவு அரைகுறையாக இருந்தால் நீ எங்கிருந்து உருப்படப்போகிறாய்’ என்று அப்பா சிறு வயதிலிருந்தே அடிக்கடி திட்டிக்கொண்டிருந்தது சரிதானோ. அப்பாவின் வேல மட்டும் கிடைக்கவில்லை என்றால் நம் கதி என்ன ஆகியிருக்குமோ என்று திடீரெனப் பயம் கவ்விக்கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!