நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி.
நைஜர் ஆற்றின் பரிசு நைஜீரியா. அபுஜாவை தலைநகராகக் கொண்டு மேற்கு ஆப்பிரிக்காவின் இதயத்துடிப்பாக திகழ்கிறது நைஜீரியா. உலகின் ஆறாவது அதிக மக்கள் தொகை மிக்க நாடு. 250க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள், 500க்கும் மேற்பட்ட மொழிகள். கலாசாரப் பன்முகத்தன்மை இழையோடியிருக்கும் தேசம்.
நைஜீரியர்கள் யோருபா, இக்போ, ஹவுசா போன்ற புராதனமான மதங்களைப் பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர். இயற்கை வழிபாடு, பூர்வீக தேவதைகள், முன்னோர்கள் வழிபாடு ஆகியவை இவற்றுள் அடங்கும். பதினோராம் நூற்றாண்டில் சஹாரா வணிகவழி மூலமாக இங்கே இஸ்லாமிய மதம் பரவியது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர்கள் வருகை, அடிமைகளை நாடு கடத்த அமெரிக்கர்களின் ஊடுருவல், பிரிட்டிஷ் காலனித்துவம் மூலமாக கிறிஸ்தவப் பரவல் போன்றவை நிகழ்ந்தன.
ஒரு சமூகத்தை காலனியாக்கம் செய்ய வேண்டுமெனில் முதலில் அவர்களுடைய கடவுள்களை காலனியாக்கம் செய்ய வேண்டும் என்று ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தின் ஜேக்கப் கெ ஒலுபோனா கூறுவார். இஸ்லாமியக் கல்வி இயக்கங்களின் ஊடுருவல் ஒருபுறம். தாய்மத வழிபாடுகளை பாவமுள்ள பின் தங்கிய நம்பிக்கைகள் எனச் சித்திரித்த கிறிஸ்தவ மிஷனரிகள் ஒருபுறம். இதனால் அங்கே பாரம்பரிய மதங்கள் ஒதுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்டன.
Add Comment