‘இலவசங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கின்றன’ என்று கடந்த ஜூலை மாதத்தில், நமது மாண்புமிகு பிரதமர் மோடிஜி போகிற போக்கில் ஒரு போடு போட்டார். அது போதாதென்று, ‘தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள், நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும். இலவசத் திட்டங்களை அறிவித்து, மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இந்திய அரசியலிலிருந்து இலவசத் திட்டக் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும்’ என்று சமீபத்திய நிகழ்ச்சியொன்றிலும் முன்பு போட்டதையே பிரதமர் மறுபடியும் திருப்பிப் போட, விஷயம் வில்லங்கமாக வெடிக்க ஆரம்பித்துவிட்டது.
Add Comment