Home » மெட்ராஸ் வரன்
சிறுகதை

மெட்ராஸ் வரன்

“மெட்ராஸ்லேர்ந்து ஒரு வரன் வந்ததுல்ல… எட்டுப் பொருத்தம்கூட இருந்ததே… அவங்க வர ஞாயித்துக்கிழமை வரேன்னு சொல்லிருக்காங்க…”

அப்பா யாரைச் சொல்கிறார்? அந்த கார்த்திக்கையா? ஹரீஷ் கல்யாண் போலச் சிவப்பாக இருந்தானே? ஏதோ மார்க்கெட்டிங்க் கம்பெனியில் சீனியர் மேனேஜர் வேலை. ஆறிலக்கத்தில் சம்பளம் வாங்குகிறான். இந்தப் பட்டிக்காட்டில் எதற்குப் பெண் தேடி வருகிறான்? பேங்க் வேலை காரணமாக இருக்குமோ? கிராமத்தில் இருப்பதால் நிலபுலன்கள் நிறைய இருக்குமென நினைத்திருப்பான். ஒன்றும் பெயராது என மூஞ்சியில் அடித்தாற்போல் சொல்லிவிட வேண்டும்.

திருச்சி, தஞ்சாவூரைத் தாண்டிய உலகம் எப்படி இருக்குமென்றே பார்த்ததில்லை. ‘உன் கல்யாணத்துக்குன்னு பெருசா உங்கப்பா ஒன்னும் சேர்த்து வைக்கல. அவன் தனியாளு. தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணி சீர் செய்யறத்துக்கே சொத்தெல்லாம் கரைஞ்சு போச்சு. ஒத்தை நிலத்தை வச்சுகிட்டு உங்கப்பா உன்னை காலேஜுக்கு அனுப்பினதே பெரிய விஷயம். மேல படிச்சாலும் ப்ரைவேட் ஸ்கூல்ல டீச்சர் வேலையைத் தவிர இங்க ஒண்ணும் கிடைக்காது. கவர்மென்ட்ல எக்ஸாம் போடுவான். அதை எழுதி பாஸாகிற வழியைப் பார்.’ எனச் சரியாக வழிகாட்டினார் சங்கரன் சார், தாத்தாவின் தோழர், ஓய்வுபெற்ற ஆசிரியர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!