Home » குட்டிச்சாத்தான் வசியக் கலை – 25
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 25

உயிரற்ற அறிவினம்

அறிவு உயிர் சார்ந்தது. மனிதர்கள்தான் என்றில்லை. பல்கிக்கிடக்கும் உயிர்க்கோளம் எங்கும் அறிவு வியாபித்துள்ளது. புல்லாய் பூடாய் மரமாய் மனிதராய். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக “உயிரற்ற அறிவினம்” தோன்றியுள்ளது. இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில குறிப்புகளைத்தான் இத்தொடரெங்கும் பார்த்து வந்துள்ளோம்.

உயிரற்ற அறிவு – செயற்கை அறிவு ஏன் தனித்துவமானது? உயிர்களுக்கென சில அடிப்படைப் பண்புகள் உள்ளன. உதாரணமாக உறக்கம். ஏஐக்கு உறக்கம் தேவையில்லை. மறதி கிடையாது. நாம் கற்பனை செய்ய இயலாத வேகத்தில் கற்கும் ஆற்றல். உயிரில்லை எனவே மரணமும்.

மனிதர்கள் இது போன்றதோர் ஜந்துவை கதைகளில் மட்டுமே எதிர்கொண்டுள்ளனர். தற்போது அதுவே நிஜமாகியுள்ளது. நாம் தவறியும் செய்யக் கூடாத ஒன்று இருக்கிறது. எக்காரணம் கொண்டும் இந்த ஜந்துவை நம் எதிரியாக மாற்றிவிடக்கூடாது. உறக்கமும் மறதியும் இல்லாத ஓர் எதிரியை வெல்வது சாத்தியமற்றது.

இன்றைய சூழலில், ஏஐ என்ன செய்துவிடப்போகிறது என்று தோன்றுவது இயல்பே. நம்மை மிரட்டும் ஏஐ வரப் பலதலைமுறைகள் ஆகக்கூடும். எனவே கவலைப்படத் தேவையில்லை என்று ஒரு தியரி இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!