Home » துபாய் குறுக்கு சந்து
பயணம்

துபாய் குறுக்கு சந்து

குறுக்குச் சந்தின் முகப்பு

வடிவேலு மூலம் பிரபலமான இடம். இன்று வரை தமிழ் கூறும் நல்லுலகம் இதை ஒரு கற்பனைச் சந்தாகவே எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லை. உண்மையிலேயே துபாய் குறுக்குச் சந்து ஒன்று உள்ளது. ஆனால் சற்று வேறு மாதிரியான சந்து.

துபாயிலேயே பல்லாண்டுக் காலமாக வசித்துக்கொண்டிருந்தாலும் நசீமா அங்கே இதுவரை சென்றதில்லை. மிகச் சமீபத்தில் அவளுக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. காரணம், அவளது தோழி மினி.

திடீரென்று சென்ற வாரம் மினி அவளைப் பார்க்க வந்தாள். வந்த வேகத்தில் ‘நசீமா, ஷேர் மார்க்கெட் செமையா விழுந்திருக்கு. தங்கம் விலை குறைஞ்சிருக்கு. இதெல்லாம் எப்பவாச்சும் நடக்கறது. வரியா போய் எதாவது வாங்கிட்டு வரலாம்?’ என்றாள்.

வாங்குவதல்ல. மார்க்கெட்டில் சுற்றி வருவதே பெரிய அனுபவம். அதுவும் துபாய் ஷாப்பிங் மால்களில் சுற்றத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. எனவே யோசிக்காமல் நசீமா சரி என்று சொன்னாள்.

‘ஆனா நாம மால் போகப் போறதில்ல.’

‘பின்ன?’

‘துபாய் குறுக்கு சந்து!’

காரில் புறப்பட்டவர்கள், தேரா கோல்டு சூக் முன்னால் இருக்கும் பார்க்கிங் கட்டடத்தில், இரண்டாவது தளத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சாலையைக் கடந்தார்கள். நசீமாவிற்கு அங்கே ஒன்றிரண்டு பெரிய நகைக் கடைகள் தெரியும். எப்போதாவது போவதென்றால் அந்த ஒன்றிரண்டில் ஒன்றுக்குத் தான் போவாள். ஆனால் மினி அவளை அக்கடைகள் தாண்டி வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு நடந்தாள்.

‘ஏன் எங்கடி போறோம்?’

“வா சொல்றேன்.”

பெரிய பெரிய நகைக் கடைகள் பல கடந்துகொண்டிருந்தன. மினி சட்டென்று நசீமாவை இழுத்துக்கொண்டு ஒரு சின்ன இரண்டடிச் சந்துக்குள் நுழைந்தாள். சந்துதான். ஆனால் பளபளப்பான சந்து! தங்கம், வெள்ளிக் கடைகள் தனித்தனியே. கொத்துக் கொத்தாக ஆபரணங்கள் குவிந்து கிடந்தன அங்கே. சந்துக்குள் சந்து, அங்கிருந்து இன்னொரு சந்து என்று அது ஒரு தனி உலகமாக இருந்தது. ஆனால் நம்ப முடியாத ஜொலிப்பு மிக்க உலகம்.

நசீமா திகைத்துப் போனாள். ஓ மை கடவுளே என்று அட்டென்ஷனில் அப்படியே நின்றாள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • துபாய் குறுக்கு சந்தில் நாம் நடந்து வந்ததை போல நல்ல எழுத்து நடை! தங்க குப்பை 😂 செம!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!