வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு பெறவிருப்பதைத் தொடர்ந்து பி.ஆர்.கவாயைப் பரிந்துரைத்துள்ளார் தற்போதையத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கவாய் சுமார் ஆறு மாதங்களுக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார்.
‘நீதிபதிகள் அரசியலமைப்பைச் செயல்படுத்துபவர்கள் மட்டுமல்ல. அதன் காவலாளிகளும் கூட. மக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சம உரிமையைக் கோரும் அதன் உணர்வின் பாதுகாவலர்களும் அவர்களே.’
‘நீதிபதிகள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும். வெளிப்படைத்தன்மை இல்லாதிருந்தால் நீதித்துறையின் மேல் மக்கள் அவநம்பிக்கை கொள்வார்கள்’.
‘சுதந்திரமான பேச்சுகளால்தான் ஜனநாயகம் கட்டமைக்கப்படுகிறது, மௌனத்தினால் அல்ல. பொது ஒழுக்கம் என்ற பெயரில் மக்களின் வாய்கள் அடக்கப்படக்கூடாது. அரசை விமர்சிப்பது தேசத்துரோகமாகாது. விவாதங்களால்தான் ஜனநாயகம் செழிக்கும்.’
‘கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளுள் ஒன்று. மாநிலங்களை மத்திய அரசு அதன் துணை அதிகாரிகளாகக் கருதமுடியாது.’
Add Comment