மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம். இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக...
வணக்கம்
வாசக நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட, மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்துக்குப் பிறகு நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நம் பக்கத்து நாடுகளை ஒரு பார்வை பார்த்தால் போதும். இந்திய தேசியம் என்பது மதச் சார்பின்மை என்னும் வலுவான சித்தாந்தத்தால் கட்டப்பட்டது. இன்று வரை நாம் பெற்ற நல்லவை அனைத்தும் அதன் மூலம் சாத்தியமானவை. இன்று வரை இங்கே நிகழ்ந்த விபத்துகள் யாவும் மதம் முன்னுக்குத் தள்ளப்படும்போது நேர்ந்தவையே. இன்றைய தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் இன்னும் மேலே செல்வதில் சிக்கல் இராது.
இந்த இதழ், எதிர்பாரா விதமாக இரண்டு சிறப்புப் பகுதிகளைக் கொண்டு அமைந்துவிட்டது. ஒன்று, முன்பே அறிவித்திருந்த மின்நூல் உலகம். இன்னொன்று இந்திய சுதந்திரப் பவழ விழாக் கொண்டாட்டம்.
இந்தத் தலைமுறை அறிந்திராத மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரும் சிந்தனையாளருமான ம.பொ.சிவஞானத்தின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ வரலாற்று ஆவணத்தை மறு அறிமுகப்படுத்தும் கட்டுரையும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஓர் அரிசியில் எழுதுவது போல நுணுக்கமாகச் செதுக்கியிருக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரையும் இப்பகுதியின் சிறப்புப் பக்கங்கள்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான பத்திரிகைகளில், சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு அப்பால் வேறென்ன செய்திகள் இடம் பெற்றிருந்தன? பழைய பத்திரிகைப் பிரதிகளுக்குள் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.
ஊர் முழுதும் பொன்னியின் செல்வனைப் பேசிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன் யாத்திரை ஒன்றை நடத்தி முடித்துத் திரும்பியிருக்கிறார். சுவாரசியம் மிக்க அவரது பயண அனுபவங்களைத் தொகுத்துத் தருகிறார் பால கணேஷ்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுள் ஒன்றுதான் இப்போது வெளியாகியிருக்கிறது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இன்று மாநிலம் முழுதும் பிரபலம். கலெக்டராக எண்ணியவரைக் கவிஞனாக்கி அழகு பார்த்த வாழ்க்கையை இந்த இதழில் அவர் திரும்பிப் பார்க்கிறார்.
மின்நூல் உலகம் சிறப்புப் பகுதிக்கென முகில் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. கிண்டிலில் நூல் வெளியிடுவது சார்ந்து பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் மனத் தடைகளைத் தகர்க்கும் கட்டுரை அது.
அந்த மனத்தடைக்குக் காரணமான ‘திருட்டு’ விவகாரம் குறித்தும் தனியே ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. எத்துறையானாலும் வளர்ச்சி என்பது சில இடர்பாடுகளையும் உள்ளடக்கியதுதான். ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு என்னும் செயல்பாடே இன்னும் தவழும் நிலையில்தான் இருக்கிறது என்னும்போது இந்த இடர்கள் பூதாகாரமாகத் தோன்றுவது புரிந்துகொள்ளக் கூடியதே.
அச்சு-மின்நூல்-ஒலிநூல்-ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இனி வரும் காலம் இவை எதையும் ஒதுக்கி வைக்க இடம் தராது. இந்தச் சிறப்புப் பகுதி அதைத் தெளிவாகப் புரியவைக்கும்.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழை மேலும் சிறப்பாகக் கொண்டு வர உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள்.
சிறப்புப் பகுதி: மின்நூல் உலகம்
புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில்...
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப்...
பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும்...
இந்தியா - 75
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
அறுசுவை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...