Home » Home 24-08-2022

வணக்கம்

இது நுழைவுத் தேர்வுகளின் காலம். மார்ச் மாதம் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மாணவர்கள் அத்தனைப் பேரும் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள். பொறியியல். மருத்துவம். சட்டம். துறை எதுவானாலும் நுழைவுத் தேர்வுகள் அவசியம் உண்டு.

இது உலகம் முழுதும் உள்ள நடைமுறைதான் என்றாலும் இங்கே அதிகம் விவாதிக்கப்படவும் விமரிசிக்கப்படவும் காரணங்கள் பல உள்ளன. ஏனெனில், மதம் போலவே கல்வியும் அரசியல் கலக்கும்போது வேறு வடிவம் எடுத்துவிடுகிறது. இது பல லட்சக் கணக்கான இளைய தலைமுறையினரின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பது அரசியல்வாதிகளுக்குப் பொருட்டில்லை. அவரவர் நியாயங்களை உலகப் பொது உண்மையாக முன்வைப்பதால் வருகிற விபரீதங்கள்.

இருக்கட்டும். இந்த இதழில் நுழைவுத் தேர்வுகள் குறித்த நான்கு கட்டுரைகள் சிறப்பிடம் பெறுகின்றன. நீட் - மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கும் உள்ள மிக நுணுக்கமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டும் பா. ராகவனின் கட்டுரை, அந்தச் சிறு வித்தியாசம் உண்டாக்கும் விபரீதங்களை மிக விரிவாக எடுத்துச் சொல்கிறது.

நுழைவுத் தேர்வுகளைப் போர்க்களத்துக்குச் செல்வது போலக் கருதும் மனோபாவம் ஏன் நம்மிடம் உள்ளது? தோல்விக்காகத் தற்கொலை வரை செல்ல எது தூண்டுகிறது? மன அழுத்தங்கள் இன்றி நுழைவுத் தேர்வுகளை அணுகவே முடியாதா? முடியும். அதற்கான உபாயங்களைச் சொல்லித் தருகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

கடந்த சில ஆண்டுகளாக நாம் கூர்ந்து கவனித்து வந்த வகையில், ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்கள் தயாராவது போலவே அவர்களது அம்மாக்களும் தயாராகிவிடுகிறார்கள். உண்மையில் அவர்கள் பிள்ளைகளைத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பிள்ளைகளைவிட இந்தத் தேர்வின் சூட்சுமம் அறிந்தவர்களாகிவிடுகிறார்கள். நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தாய்மார்கள் மிகவும் சுவாரசியமானவர்கள். அவர்களுடைய அனுபவக் கதைகள், தேர்வெழுதும் பிள்ளைகளின் அனுபவத்தினும் பெரிது. இந்த இதழில் அத்தகைய ‘தேர்வுத் தாய்மார்களின்’ அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

இவை தவிர, நீட் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை இரண்டு மாணவர்கள் இவ்விதழில் விவரித்திருக்கிறார்கள் (பிரபு பாலாவின் கட்டுரை).

கல்வி என்பது பாதுகாப்பான எதிர்காலத்துக்கான ஒரு சௌகரியமான முதலீடு. துரதிருஷ்டவசமாக, அது ஒரு பெரும் தொழிலாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் காலத்தில் பின் தங்கிவிடாதிருக்க முயற்சியும் பயிற்சியும் செய்யலாம் அல்லவா? அதைத்தான் மையப்படுத்துகிறது இந்த இதழில் இடம் பெற்றுள்ள இக்கட்டுரைகள்.

பெரும்பாலும் கேளிக்கையை முன்னிலைப்படுத்தும் வெகுஜனப் பத்திரிகைகள் மத்தியில் மக்களுக்குப் பயனுள்ளவற்றை மட்டுமே பேசுகிற ஓர் இதழாக மெட்ராஸ் பேப்பர் வருகிறது என்று சென்ற வாரம் ஒரு வாசகர் எழுதியிருந்தார். நமது நோக்கம் சரியானவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேருகிற மகிழ்ச்சியை அந்தச் சிறிய குறிப்பு அளித்தது. மெட்ராஸ் பேப்பர் இன்னும் பரவலான வாசகர்களைச் சென்று சேர உங்கள் ஆதரவு தேவை. இதன் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு புதிய வாசகரைச் சந்தாதாரர் ஆக்குவதன் மூலம் இந்த இயக்கம் வலுப்பெற உதவ முடியும்.

செய்வீர்கள் அல்லவா?

 • சிறப்புப் பகுதி: நுழைவுத் தேர்வுகள்

  கல்வி

  பொறி வைத்துப் பிடித்தல்: சில குறிப்புகள்

  பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குப் பின்னால் நடக்கும் அனைத்தையும் அலசும் கட்டுரை. சென்ற ஆண்டு வரை நான் ஒரு நீட் எதிர்ப்பாளனாக இருந்தேன். தமிழக அரசியல்...

  கல்வி

  நீட்: அஞ்சாதே!

  அரசியலை எல்லாம் ஒதுக்கி வைப்போம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள்? நேரடியாக விசாரித்து அறியப் புறப்பட்டோம். இளநிலை மருத்துவப்...

  கல்வி

  கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள் இசை எடிட்டிங் – அம்மாக்கள்!

  நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் எப்போது ஆரம்பமானதோ அப்போதிலிருந்து தேர்வுகள் என்பவை பணத்தைக்கட்டி ஓடவிடும் குதிரைப் பந்தயக் களமானது. பிள்ளைகளை விடுங்கள்...

  கல்வி

  துவளாதே!

  2019 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் நுழைவுத் தேர்வுகள், பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக நான்காயிரம் மாணவர்கள் தற்கொலை...

  எட்டுத் திக்கு

  நம் குரல்

  ஒரு தீர்ப்பு, ஒரு திறப்பு

  வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...

  உலகம்

  மெல்ல எழும் பூகம்பம்

  இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும்...

  உலகம்

  பழைய பகையும் புதிய எல்லைகளும்

  தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க்...

  உலகம்

  வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?

  வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால்...

 • தொடரும்

  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் – 45

  45 மா.இராசமாணிக்கனார்  (12.03.1907 –  26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை -71

  71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...

  Read More
  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 70

  70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே  அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...

  Read More
  விண்வெளி

  வான் – 3

  “சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்” ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத்...

  Read More
  error: Content is protected !!