28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வணக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, உலகம் எதிர்பார்த்ததினும் மோசமான எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிகிறது. உக்ரைனியக் குழந்தைகளை (போர்க்களமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதிகள் சிலவற்றில் வசிப்பவர்கள்) வலுக்கட்டாயமாக ரஷ்ய வீரர்கள் நாடு கடத்தி, தம் தேச எல்லைக்குள் இழுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்படிக் கட்டாய நாடு கடத்தலுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பதினாறாயிரத்தைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.
இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு போர்க்குற்றம். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான கைது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவிட்டிருப்பது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்.
யாரும் உடனே புதினைக் கைது செய்யப் போவதில்லை; அதற்கெல்லாம் வாய்ப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் யுத்தம் தொடங்கிய நாள் முதல் இது ஓர் அநியாயப் போர்; அத்துமீறல் என்று கருதும் பெரும்பான்மை மனித குலத்துக்கு ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
இது ஒரு புறம் இருக்க, பிராந்தியத்தில் பறந்த ஆளில்லா அமெரிக்க ட்ரோன் விமானமொன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அபாயம். ஏனெனில், நேற்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்ததே தவிர நேரடியாக ரஷ்யா மீது எந்தத் தாக்குதலும் தொடுக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனிய இலக்குகளை மட்டுமே தாக்கி வந்ததே தவிர, அதன் உதவி நாடுகளைத் தொட்டதில்லை. ஆனால் மார்ச் 14ம் தேதி நடந்த இச்சம்பவம், அமெரிக்காவின் மீது ரஷ்யா நேரடியாகத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிவிட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கவே, ஐரோப்பியக் கண்டம் முழுதும் பதற்றம் எழுந்துள்ளது. இது ஒன்றுமில்லாமல் அடங்கிவிடுமானால் ஊருலகுக்கு நல்லது. சிக்கல் பெரிதானால் விளைவுகள் சிந்திக்கக்கூடியதல்ல. இப்பிரச்னையின் ஆழ அகலங்களை விரிவாக விவரிக்கும் கட்டுரை ஒன்றை இந்த இதழில் வினுலா எழுதியிருக்கிறார்.
இதனைப் போலவே இன்னொரு முக்கியமான கட்டுரை, அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி இழுத்து மூடப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிறது. இலவசக் கொத்தனார் எழுதியிருக்கும் இக்கட்டுரை, நாற்பதாண்டுகால வரலாறுள்ள ஒரு வங்கி எப்படி நான்கே நாள்களில் மூழ்கிப் போகும் என்று தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
மத்திய அமெரிக்க நாடான ஹண்டுரஸில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைந்து, அவதிப்படும் லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரிக்கும் ஆ. பாலமுருகனின் ‘எல்லை தாண்டும் பிள்ளைகள்’, இலங்கைப் பிரச்னையின் இன்றைய பரிமாணத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் ‘மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்’, அ. பாண்டியராஜனின் ‘தள்ளாடும் கல்வித்துறை; தடுமாறும் மாணவர்கள்’, சிவராமன் கணேசனின் ‘உளவுக்கு வந்த புறா’ என்று இந்த இதழெங்கும் நீங்கள் வாசிப்பதற்கு சுவாரசியமான படைப்புகள் பல உள்ளன.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அது இதழை இன்னமும் மேம்படுத்த உதவும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இன்னும் சுவாரசியமான பல கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
உலகைச் சுற்றி
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நம்மைச் சுற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும்...
நுட்பக் கோட்டை
கடலிலுள்ள கரியமில வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பத்தைக்கொண்டு கடலைச் சுத்தம் செய்யத்தொடங்கியிருக்கிறது சீக்யூர் (SeaCURE) என்ற நிறுவனம். இதனால்...
வாழ்வும் வழிபாடும்
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக...
“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிமூன்றாவது தமிழக...
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...