சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, செயலிகள். பெண்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள், அமெரிக்கப் பிரபலங்கள் பயன்படுத்தும் செயலிகள், கடன் செயலிகள், எழுத உதவும் செயலிகள், ஸ்கேனிங் செயலிகள் எனப் பல தரப்பட்ட செயலிகளைக் குறித்து இந்த இதழில் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. டயட் செயலிகளை இழுத்துப் போட்டு, கதறக் கதற நக்கலடிக்கும் சிவசங்கரி வசந்தின் கட்டுரை மனம் விட்டுச் சிரிப்பதற்கு.
சென்ற வாரம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சி குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியிருந்தார். இந்த இதழில் அதன் தொடர்ச்சியாக, இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் தப்பித்தல் முயற்சிகளை விவரித்திருக்கிறார் (உலகம் சுற்றும் வாலிபன் - புதிய காப்பி). செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் குறித்து ராஜிக் இப்ராஹிம் எழுதியுள்ள கட்டுரையும் துபாயில் இருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் பாலை வனத்தின் நடுவே நிகழ்ந்திருக்கும் ஒரு பசுமைப் புரட்சி குறித்து நசீமா ரசாக் எழுதியுள்ள கட்டுரையும் முக்கியமானவை.
ஜூலை 21ம் தேதி எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்த நாள். அம்மாபெரும் கலைஞனை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பென்னேஸ்வரன் எழுதியிருக்கும் கட்டுரை இந்த இதழுக்கு வண்ணம் சேர்க்கிறது.
வரலாறு முக்கியம் பகுதியில் அறிவன் இம்முறை சிறு தெய்வ வழிபாட்டின் தோற்றத்தை விவரித்திருக்கிறார். முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் வாசித்தால் பல திறப்புகளைத் தரும் கட்டுரை இது.
மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் அறிதலில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் ஒவ்வொருவருக்காகவும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கிறோம். இதை இன்னும் பரவலான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் எங்களோடு தோள் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுக்கு இதழ் பிடித்திருக்கிறதா? போதும். உங்களைப் போன்ற ஒரே ஒரு வாசகரை நீங்கள் மெட்ராஸ் பேப்பருக்கு அழைத்து வாருங்கள். சந்தாதாரர் ஆக்குங்கள். அவர் உங்கள் நண்பராக இருக்கலாம். உறவினராக இருக்கலாம். தெரிந்த யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய வாசகரும் உங்களைப் போலவே இந்தப் பத்திரிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒருவர் ஆவார்.
செய்வீர்கள் அல்லவா?
சிறப்புப் பகுதி: செயலிகள்
அக்கம் பக்கம்
ருசிகரம்
தொடரும்
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...