Home » Home 19-10-22

வணக்கம்

புதுமைப்பித்தன் நினைவாக வட அமெரிக்கத் தமிழர் பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘விளக்கு’ விருது இந்த வருடம் வண்ணநிலவனுக்கும் (புனைவு) அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழனுக்கும் (அபுனைவு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் வாழ்த்தும் வணக்கமும்.

வண்ணநிலவன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். எளிமையான எழுத்து போன்ற தோற்றமும் ஆழமான உள்ளடுக்குகளும் கொண்ட வண்ணநிலவனின் கதைகள் மிகவும் சிக்கனமாக எழுதப்பட்டவை. தேவையற்ற ஒரு சொல்கூட அவரது எழுத்தில் இராது. கேளிக்கைக்கோ, போதனைகளுக்கோ, பிரசாரங்களுக்கோ, பிரசங்கத்துக்கோ இடமே அற்ற சுத்தமான கலை வடிவை அவரது கதைகளில் காணலாம்.

இந்த இதழில் வண்ணநிலவனின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான சாரதா, அவரது அனுமதியுடன் மீள் பிரசுரமாகியிருக்கிறது. அந்தக் கதையின் நுட்பங்களைத் தொட்டுச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும், வண்ணநிலவனுடனான தனது நட்பின் ஆழங்களை விவரிக்கும் கலாப்ரியாவின் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருக்கின்றன. சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் இந்தப் பகுதியை யாரும் படிக்கலாம். வாசகர்களுக்கு மெட்ராஸ் பேப்பர் வழங்கும் தீபாவளிப் பரிசு இதுதான்.

இந்த இதழின் மற்றொரு சிறப்புப் பகுதி, வீட்டுத் தோட்டம். தோட்டக் கலையில் அனுபவம் மிக்கவர்கள் இதில் எழுதியிருக்கிறார்கள். பால்கனியில், மொட்டை மாடியில், வீட்டில் கிடைக்கும் இதர சொற்ப இடங்களில் தோட்டம் போட விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அக்டோபர் என்பது Attention Deficit and Hyperactive disorder எனப்படும் ADHD விழிப்புணர்வு மாதம். இது குறித்து இந்த இதழில் அ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, இந்த இயல் சார்ந்த சில புதிய திறப்புகளைத் தரவல்லது.

அவ்வண்ணமே கூகுள் நிறுவனத்தில் வேலை பெறுவது எப்படி என்று படிப்படியாக விவரிக்கும் முத்து காளிமுத்துவின் கட்டுரையும் நாம் அறியாததொரு உலகின் கதவுகளைத் திறந்து காட்டும் தன்மை கொண்டது.

மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களிடம் சிக்கி வாழ்நாளெல்லாம் சிறைக் கைதியாகவே வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கும் ஆங் சான் சூ கியின் மீது சமீபத்தில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் கிடைத்திருக்கும் தீர்ப்பும் தண்டனையும் அத்தேசத்தின் தீராத பெருந்துயரின் ஒரு சிறிய சாட்சி. சூகிக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய தண்டனையை முன்வைத்து மியான்மரின் அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று.

திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கனின் பேட்டி, புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்பி வைத்த காலம் முதல் வாட்சப் தகவல் பரிமாற்றக் காலம் வரையிலான தகவல் தொடர்பின் வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, மொபைல் போன்களில் அவசியம் இருந்தாக வேண்டிய செயலிகளைக் குறித்து வெங்கட் எழுதியிருக்கும் கட்டுரை - இவை யாவும் உங்கள் ஆர்வத்துக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

விளக்கு விருது: வண்ணநிலவன்

சிறப்புப் பகுதி: வீட்டுத் தோட்டம்

உள்ளும் புறமும்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!