Home » Home 18-01-23

வணக்கம்

சென்ற புதன் கிழமை (ஜனவரி 11, 2023) மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தது. அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் ராம்ஜி-காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட்டார்கள். எழுத்தாளர் என். சொக்கன் நூலாசிரியர்களை வாழ்த்திப் பேசினார். அரங்கு நிறைந்த கூட்டமாக நடந்தது பெரிதல்ல. நன்றியுரை முடியும்வரை யாரும் எழுந்து செல்லாமல் இறுதி வரை இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தமிழ்ச் சூழலில் ஒரு ‘முதல்’. இத்தனைக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுள் ஐம்பது பேருக்கு மேல் உட்கார இடம் கிடைக்கவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்றுகொண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் கண்டு களித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தவறாமல் கேட்ட கேள்வி, ‘நீங்கள் ஏன் ஒரு பெரிய மண்டபத்தில் நிகழ்ச்சியை வைத்திருக்கக் கூடாது?’

செய்திருக்கலாம். இன்னும் நிறையப் பேர் நிகழ்ச்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் இப்படிக் குடும்ப விழா ஒன்றைக் கொண்டாடுவது போன்ற மன நிறைவு அதில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். வந்திருந்த ஒவ்வொருவரும் அப்படித்தான் உணர வைத்தார்கள். நமது எழுத்தாளர்களான அ. பாண்டியராஜன், பிரபு பாலா, பாபுராஜ், கோகிலா, ஶ்ரீதேவி கண்ணன் எல்லோரும் கல்யாண வீட்டில் அரட்டை அடித்தபடி சாத்துக்குடி பை போடுவது போல விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொதிகளைத் தயார் செய்யத் தொடங்கியதில் இருந்து , நிகழ்ச்சி முடிந்ததும் ஸஃபார் அஹ்மத் மீதமிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து வந்து மெட்ராஸ் பேப்பர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றது வரை எதைச் சொல்ல, எதை விட?

ஒன்று சொல்லலாம். ஊரைக் கூட்டிக் கொண்டாடும் நோக்கம் உண்மையிலேயே யாருக்கும் இருக்கவில்லை. உறவுகளோடு சேர்ந்து ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வுதான் அனைவருக்குமே இருந்தது. அதனால்தான் சிறிய இடம், நிறைந்த அனுபவம். வந்திருந்த மெட்ராஸ் பேப்பர் வாசகர்களும் அவ்வண்ணமே உணர்ந்ததாகச் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

புத்தக வெளியீடுகள் இன்று சாதாரணமாகிவிட்டன. தினமும் பத்து புத்தகங்களாவது வெளியாகின்றன. ஆனால் வெளியாகும் புத்தகங்களில் எத்தனை மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்றன? நம்முடைய பதிமூன்று புத்தகங்களும் இந்த விழாவுக்கு முன்னரே சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டதைப் பதிப்பாளர் ராம்ஜி குறிப்பிட்டார். மக்களுக்குப் பிடிக்கும் விதமாக, அவர்களின் தேவை அறிந்து எழுதப்படும் புத்தகங்கள் விற்பனையில் தவறு செய்வதில்லை. இதில் தொடராக வந்தவை - நேரடிப் புத்தகங்களாக எழுதப்பட்டவை என்ற பாகுபாடே இல்லை. என். சொக்கன் தனது உரையில் நேரடிப் புத்தக எழுத்து எப்படி ஓர் இயக்கமாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிப் பேசியதை, நல்ல நூல்கள் காலம் வெல்லும் விதத்தைச் சுட்டிக்காட்டிய திருப்பூர் கிருஷ்ணனின் உரையுடன் ஒப்பிட்டு நோக்கினால் நாம் சரியான பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

இந்த விழாவுக்கென நமது அயலக எழுத்தாளர்கள் பலர் சென்னை வந்திருந்தார்கள். சிங்கப்பூரில் இருந்து முருகு தமிழ் அறிவன், துபாயிலிருந்து நஸீமா ரஸாக், இலங்கையில் இருந்து ஸஃபார் அஹ்மத், ரும்மான், ஹாங்காங்கில் இருந்து பூவராகன் - மெட்ராஸ் பேப்பர் என்பது வெறும் ஓர் இதழல்ல; அது ஓர் இயக்கம் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தது இவர்களுடைய வருகையும் ஈடுபாடும். முன்னரே அறிவித்திருந்த வாசகர் கேள்வி நேரத்தில் நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆர்வமுடன் கலந்துரையாடினார்கள். வாசகர்களுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொறுப்பை ஏற்ற ரும்மானின் வினாக்களுக்கும் பதிலளித்தார்கள். ஒரு கட்டத்தில் இக்கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமானதாக ஆகிப் போனது. திருப்பூர் கிருஷ்ணன், ராம்ஜி, சொக்கன் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களும் சலிக்காமல் பதில் சொல்லி அசத்தினார்கள்.

இந்த வாசகர் திருவிழா - 13 புத்தக வெளியீட்டு விழா என்பது ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாவுக்கு ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மொத்த நிகழ்ச்சியையும் ஸ்ருதி டிவி கபிலன் நேரலையில் கொண்டு வந்து உடனடியாக உலகம் கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தார். நமது சிறப்புச் செய்தியாளர் கோகிலா பாபு நிகழ்ச்சி முழுவதையும் புகைப்படம் எடுத்தார். இந்த இதழில் அவையும் பிரசுரமாகியிருக்கின்றன. நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள், நேரலையில் காணாதவர்கள் இப்போது கண்டு ரசிக்கலாம்.

 • உலகைச் சுற்றி

  உலகம்

  மெல்ல எழும் பூகம்பம்

  இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும்...

  உலகம்

  பழைய பகையும் புதிய எல்லைகளும்

  தென்கிழக்கு ரஷ்யாவில் ஆரம்பித்து உக்ரைனுக்குக் கிழக்கே போகிறதொரு இரயில் பாதை. ரஷ்யாவின் ரஸ்தோவ், டகன்ரோக் நகரங்களை, உக்ரைனின் மரியுபோல், டோனெஸ்க்...

  உலகம்

  வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?

  வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால்...

  ருசிகரம்

  நம் குரல்

  ஒரு தீர்ப்பு, ஒரு திறப்பு

  வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...

 • தொடரும்

  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் – 45

  45 மா.இராசமாணிக்கனார்  (12.03.1907 –  26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...

  Read More
  குடும்பக் கதை தொடரும்

  ஒரு குடும்பக் கதை -71

  71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...

  Read More
  இலக்கியம் நாவல்

  ஆபீஸ் – 70

  70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே  அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...

  Read More
  விண்வெளி

  வான் – 3

  “சோவியத் இனி நம்மைத் தினமும் பல தடவை கடந்து போகும். தேவைப்பட்டால் எமது வீடுகளுக்குள் புகுந்து வேவு பார்க்கும். குண்டுகளை விண்வெளியிலிருந்து வீசி அடிக்கும்” ஸ்புட்னிக்-01 போனதுதான் போனது… அமெரிக்காவில் கடுமையான பதற்றம்! அரச அதிகாரிகள் தொடக்கம் சாதாரண பொதுமக்கள் வரை எல்லாத்...

  Read More
  error: Content is protected !!