இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
சென்ற வாரம் நமது வாசகர்களுள் சிலருக்கு சந்தா புதுப்பிக்கச் சொல்லி மின்னஞ்சல் ஒன்று சென்றிருக்கிறது. பிளகின் தானே செய்த சேவை அது. உண்மையில், ஆண்டு சந்தா செலுத்தியவர்கள் ஜூன் 1ம் தேதி வரை புதுப்பிக்க அவசியமில்லை. நமது பத்திரிகை தொடங்குவதற்கு முன்னரே (ஒரு மாதம் முதல் ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்னர் வரை) சந்தா செலுத்திப் பதிவு செய்துகொண்டவர்களுள் சிலர், ‘auto debit’ வேண்டாம்; நானே சந்தாவைப் புதுப்பித்துக்கொள்வேன் என்னும் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அந்த அஞ்சல் சென்றிருக்கிறது. பிரச்னை இல்லை. புகார் தெரிவித்த அனைவருக்கும் சரி செய்து தரப்பட்டுவிட்டது. இன்னும் யாருக்காவது தளத்தைப் படிக்க முடியாத சூழல் இருக்குமானால் 8610284208 என்னும் எண்ணுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன், சந்தா செலுத்திய விவரங்களைச் சேர்த்து அனுப்பினால் (வாட்சப்) சிக்கல் சரி செய்யப்படும்.
நிற்க. இந்த ஓராண்டுக் காலமாக மெட்ராஸ் பேப்பரை வாசித்து வரும் உங்களுக்கு இதன் தரம் தெரியும். இதர வார இதழ்கள் எதிலும் வராத எத்தனையோ புதிய விஷயங்களை நாம் தொடர்ந்து அளித்து வருவது தெரியும். கனமான சர்வதேச விவகாரங்களைக் கூட மிக எளிய தமிழில், பாமரரும் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் தருவது நமது பத்திரிகையின் சிறப்பம்சம்.
இந்த இதழிலேயே பாருங்கள். துருக்கி பொதுத் தேர்தலை முன்வைத்து அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றையுமே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய கட்டுரைக்குள் அடக்கித் தந்திருக்கிறார் நமது ஸஃபார் அஹ்மத். பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது என்று தினசரிகளில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கைதுக்கும் நீதிமன்றம் அளித்த ஜாமினுக்கும் பின்னால் உள்ள அனைத்து அரசியலையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிவிடுகிறது நஸீமா எழுதியிருக்கும் கட்டுரை. கடந்த இரண்டு வாரங்களாக வந்துகொண்டிருக்கும் இலவசக் கொத்தனாரின் ‘வானமா எல்லை?’ இந்த இதழுடன் நிறைகிறது. எலான் மஸ்க் என்கிற மனிதரை ஒரு கிறுக்கனாக நமது ஊடகங்கள் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கும் சூழலில் கிறுக்குத்தனத்துக்கும் மேதைமைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அவர் எப்படி அழிக்கிறார் என்று துல்லியமாகக் காட்சிப்படுத்திவிடுகிறது இக்கட்டுரை. ஒவ்வொரு கட்டுரையையும் இப்படித்தான் பார்த்துப் பார்த்துச் செதுக்கித் தருகிறோம்.
மிகப் பெரிய இலக்குகளை வைத்துக்கொண்டு, மிகச் சிறிய முதலீட்டில்தான் இதனைத் தொடங்கினோம். சிறியதொரு வாசகர் வட்டமே என்றாலும் கூர்ந்த வாசிப்பில் நாட்டமும் தேர்ச்சியும் உள்ளவர்களாக அவர்கள் இருப்பதுதான் நமது பிரத்தியேக மகிழ்ச்சி. இதனால்தான் சந்தாத் தொகை என்பது வாசகர்களுக்கு ஒரு சுமையாகிவிடக் கூடாது என்று மிகவும் யோசித்தே ஆண்டுச் சந்தா ரூ. 400 என்று நிர்ணயித்தோம். வேறு எந்த வார இதழையும் நீங்கள் இந்தத் தொகைக்கு வாசிக்க முடியாது.
வாசகர்களிடம் நாம் வேண்டுவது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உங்கள் சந்தாவை உரிய நேரத்தில் புதுப்பிப்பது. இதழ் உங்களுக்குப் பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர்களாக்குவது. மெட்ராஸ் பேப்பர் என்னும் அறிவியக்கம் தொடரவும் தழைத்தோங்கவும் இதுவே வழி.
செய்வீர்கள் அல்லவா?
நம்மைச் சுற்றி
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நுட்ப பஜார்
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...