Home » Home-15-06-22

வணக்கம்

இது உணவுச் சிறப்பிதழ். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உணவு பரிமாறும் கலை வரை ஏராளமான விஷயங்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன.

இதனினும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உண்டு. இந்த இதழில் சமையல் குறிப்புகள் கிடையாது.

இலக்கியம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் நேரம் மறந்து கூடிப் பேசுவோரை அறிந்திருப்பீர்கள். உணவும் அப்படிப்பட்ட ஓர் இயல்தான். என்ன பேசினாலும் அலுக்காது; எத்தனை விதமாகப் பேசினாலும் சலிக்காது.

ஆனால் தமிழ்ச் சூழலில் உணவைக் குறித்துப் பேசுவது என்றாலே சமையல் குறிப்புகளைச் சொல்வதுதான். இது இன்று நேற்று உருவான வழக்கமல்ல. தொன்று தொட்டே இப்படித்தான். இணையத்தில் தொட்டதற்கெல்லாம் ‘லிங்க் ப்ளீஸ்’ என்று கேட்பதை நிகர்த்தது இது. உண்மையில், சிறந்த சமையல் என்பது குறிப்புகளைப் புறந்தள்ளி உருவாவதே ஆகும். கலை மனமும் மேம்பட்ட ரசனையும் தீராத ஆர்வமும் ஒருங்கிணையும்போதே ருசி மிகுந்த ஓர் உணவு உருவாகிறது. பொருள்களல்ல. அவற்றைக் கையாள்வோரின் திறமையே ருசியின் ஆதாரம்.

இந்த இதழில் வழக்கமான தொடர் பகுதிகளைத் தவிர, உணவு சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஷாராஜின் சிறுகதையும் அது தொடர்பானதே. மொத்தமாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்களுக்கு இது வசதியாக இருக்கும். உலகம் உண்ணும் விதத்தை ஒரு புத்தகத்தில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொண்டாற் போன்ற அனுபவத்தைத் தர வேண்டும் என்று எண்ணியதால் இந்த ஏற்பாடு.

இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் மேலும் சிறப்பாக வெளிவர உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியம்.

உலகம் எப்படி உண்கிறது?

அறுசுவை

சிந்தனை செய்

வரலாறு முக்கியம்

தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...

Read More
error: Content is protected !!