சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
வணக்கம்
இது உணவுச் சிறப்பிதழ். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உணவு பரிமாறும் கலை வரை ஏராளமான விஷயங்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன.
இதனினும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உண்டு. இந்த இதழில் சமையல் குறிப்புகள் கிடையாது.
இலக்கியம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் நேரம் மறந்து கூடிப் பேசுவோரை அறிந்திருப்பீர்கள். உணவும் அப்படிப்பட்ட ஓர் இயல்தான். என்ன பேசினாலும் அலுக்காது; எத்தனை விதமாகப் பேசினாலும் சலிக்காது.
ஆனால் தமிழ்ச் சூழலில் உணவைக் குறித்துப் பேசுவது என்றாலே சமையல் குறிப்புகளைச் சொல்வதுதான். இது இன்று நேற்று உருவான வழக்கமல்ல. தொன்று தொட்டே இப்படித்தான். இணையத்தில் தொட்டதற்கெல்லாம் ‘லிங்க் ப்ளீஸ்’ என்று கேட்பதை நிகர்த்தது இது. உண்மையில், சிறந்த சமையல் என்பது குறிப்புகளைப் புறந்தள்ளி உருவாவதே ஆகும். கலை மனமும் மேம்பட்ட ரசனையும் தீராத ஆர்வமும் ஒருங்கிணையும்போதே ருசி மிகுந்த ஓர் உணவு உருவாகிறது. பொருள்களல்ல. அவற்றைக் கையாள்வோரின் திறமையே ருசியின் ஆதாரம்.
இந்த இதழில் வழக்கமான தொடர் பகுதிகளைத் தவிர, உணவு சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஷாராஜின் சிறுகதையும் அது தொடர்பானதே. மொத்தமாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்களுக்கு இது வசதியாக இருக்கும். உலகம் உண்ணும் விதத்தை ஒரு புத்தகத்தில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொண்டாற் போன்ற அனுபவத்தைத் தர வேண்டும் என்று எண்ணியதால் இந்த ஏற்பாடு.
இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் மேலும் சிறப்பாக வெளிவர உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியம்.
உலகம் எப்படி உண்கிறது?
அறுசுவை
சிந்தனை செய்
வரலாறு முக்கியம்
தொடரும்
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...