Home » Home 10-01-2023

வணக்கம்

இன்று (புதன் கிழமை - ஜனவரி 11) மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் இவ்விழாவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

இது நம் குடும்ப விழா. ஓராண்டுக் காலம் எழுத்துப் பயிற்சி. ஏழு மாத கால பத்திரிகைப் பயிற்சி. அதன் பிறகு ஒரு புத்தகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது எழுத்தாளர்கள் உண்டார்களா, உறங்கினார்களா, குடும்பத்தைக் கவனித்தார்களா, வேலைக்குச் சென்றார்களா என்றுகூடத் தெரியாது. இரவு பகலாக எழுதிக்கொண்டேதான் இருந்தார்கள். அது பலனளிக்கும் இத்தருணத்தில் உங்கள் வருகையும் வாழ்த்தும் அவர்களுக்குப் பேருவகை அளிக்கும்.

தமிழில் கதை எழுத, கவிதை எழுத ஆயிரம் பல்லாயிரம் பேர் உண்டு. தினமும் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்து ஆய்வு செய்து, நுணுக்கமான விவரங்கள் சேகரித்து, ஆதாரபூர்வமானதொரு அபுனைவு நூலை எழுத வருவோர் மிகவும் குறைவு. இதுதான் சமரசமே இல்லாத மக்கள் எழுத்து. மக்களுக்கு உதவும் எழுத்து. ஆனால் சிரமமானது. நீடித்த கவனமும் அர்ப்பணிப்பும் தீவிரமும் கோருகிற ஒரு துறை இது.

நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவுகளும்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலமு’ம் பேய் வேகத்தில் விற்பதாகப் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் சொன்னார்.

இதன் அர்த்தம் புரிகிறதா? மாணவர்கள் தம் மேற்படிப்புக்கு வழி காட்டும் ஒரு சரியான நூலைத் தமிழில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். உதவி இயக்குநர்கள் அடுத்தக் கட்டத்தை எட்டிப் பிடிக்க தொண்டர் குலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.

மெட்ராஸ் பேப்பர் வெளியீடாக வந்திருக்கும் பதிமூன்று நூல்களுமே இந்த ஆண்டை ஆளப்போகின்றன என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. இம்மகிழ்ச்சியை நீங்களல்லாமல் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து கொண்டாட முடியும்? அதனால்தான் சொல்கிறோம். அவசியம் விழாவுக்கு வருக.

தவிர, இது மேடையில் இருப்போர் மட்டும் பேசுகிற விழா அல்ல. வாசகர் திருவிழா. மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் உள்பட குழுவினர் அனைவருடனும் நீங்கள் விவாதிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை, விமரிசனங்களை முன்வைக்கலாம். புத்தகங்கள் குறித்துப் பேசலாம். உங்களைச் சந்திப்பதற்காகவே நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் உலகெங்கிலும் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்றைய விழாவிலும் நாளை (வியாழன்) முழுதும் சென்னை புத்தகக் காட்சியிலும் உங்களுடன் உரையாடுவதற்காகவே காத்திருப்பார்கள்.

O

இந்த இதழில் சி. சரவண கார்த்திகேயன், ஆத்மார்த்தி, நர்மி, ஷாராஜ், சித்ரன் ரகுநாத் ஆகியோர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழர் திருநாளை ஒட்டி இது உங்களுக்கு ஓர் எதிர்பாரா நல்விருந்தாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பொங்கல் பண்டிகை என்று நாம் கொண்டாடும் இத்திருநாள் உலகெங்கும் பல்வேறு விதங்களில், வடிவங்களில் கொண்டாடப்படுவதுதான். தைத்திருநாளின் சரித்திரத்தை சுவைபட விவரிக்கும் கோகிலா பாபுவின் கட்டுரை உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

இது மகர ஜோதி மாதமும் கூட. நமது செய்தியாளர் அ. பாண்டியராஜன் தமது சபரிமலை யாத்திரை அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள கட்டுரை, பக்திப் பரவச உணர்வை முற்றிலும் வேறொரு ருசியில் மறு அறிமுகப்படுத்துகிறது.

வாசக நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இன்று (ஜனவரி 11) மாலை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள நமது வாசகர் திருவிழாவில் சந்திப்போம்.

பொங்கல் சிறப்புச் சிறுகதைகள்

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

ருசிகரம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!