Home » Home 05-10-2022

வணக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி, பெருவெற்றி கண்டிருக்கிறது. இது அந்நாவல் அடைந்த வெற்றிக்குச் சற்றும் குறைந்ததல்ல. எழுபதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நாவல் இன்னொன்றில்லை. தமிழ்நாட்டில் வாசிப்பு என்னும் செயல்பாட்டை ஒரு கடமையாக - இன்னும் சொல்லப் போனால் மதமாக வார்த்தெடுத்த நாவல் அது.

கல்கி அதனை எழுதிய காலம் தொட்டே அது இலக்கியமில்லை என்றொரு எதிர்க்குரல் இருந்து வந்திருக்கிறது. இன்று வரை அதுவும் ஓயவில்லை. பொன்னியின் செல்வன் ஒரு வெகுஜன வாசிப்புப் பிரதிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஏராளமானோரின் விருப்பத்துக்குரியதாக இருப்பது கொலைபாதகமும் அல்ல. இன்று நவீன இலக்கியம் வாசிக்க வந்து சேர்ந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அங்கே கிளம்பி வந்தவர்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இன்று வரை நமக்குக் கல்கியும் பொன்னியின் செல்வனும்தான் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

இந்த இதழின் சிறப்புப் பகுதியாகப் பொன்னியின் செல்வன் இடம் பெறுகிறது. திரைப்பட விமரிசனத்தைப் பெனாத்தல் சுரேஷ் எழுதியிருக்கிறார். கல்கி தமது நாவலுக்குள் காட்டியிருக்கும் (சிறிதளவு) சரித்திரத்துக்கு இந்தப் படம் எவ்வளவு நெருங்கி வருகிறது என்று சு. க்ருபாசங்கர் ஆராய்கிறார். கல்கி என்கிற ஆளுமையின் சில அறியாத பக்கங்களை எஸ். சந்திரமௌலியின் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. இத்திரைப்படத்துக்கோ, பொன்னியின் செல்வன் நாவலுக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் சோழர்களின் முழுமையான வரலாற்றை மிகச் சுருக்கமாக - அதே சமயம் எதுவும் விடுபடாமல் விவரித்திருக்கிறார் அறிவன்.

நாம் இங்கே ஒரு திரைப்படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஈரானில் ஓர் இளம் பெண் சரியாக ஆடை அணியவில்லை என்று (பொய்யான) காரணம் சொல்லிக் கொலையே செய்துவிட்டது காவல் துறை. கொதித்துப் போன மக்கள் அங்கே அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடத் தொடங்கி, நாளுக்கு நாள் அங்கே நிலவரம் தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றம் வரை சென்றாலும் வியப்பதற்கில்லை. ஈரான் நிலவரம் பற்றி இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது.

ஈரானில் ஹிஜாப் பிரச்னை என்றால், பிரிட்டனில் பவுண்ட் பிரச்னை. வரலாறு காணாத நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு, புதிய பிரதமர் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் அங்கே. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, பிரிட்டன் நிலவரத்தைத் துல்லியமாக விளக்குகிறது.

நமது ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை குறித்து பிரபு பாலா எழுதியுள்ள கட்டுரை பல நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கியது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகியிருக்கும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதிய உத்தியின் சாதக பாதகங்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.

தந்தையின் புகழ் வெளிச்சத்தைத் தன்மீது பட அனுமதிக்காமல் தனது சொந்த முயற்சியால் ஊட்டச் சத்துத் துறையில் கொடி நாட்டியிருக்கும் திவ்யா சத்யராஜின் கதையும், எந்தப் பின்புலமும் இன்றித் தனது சொந்தத் திறமையால் மட்டுமே முன்னேறி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் வெற்றிக் கதையும் நாம் கற்கச் சில பாடங்களைத் தருவன.

மேற்சொன்னவை தவிரவும் இந்த இதழில் நீங்கள் வாசித்து ரசிக்க இன்னும் பல அம்சங்கள் உண்டு. மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் உங்கள் ரசனையை கௌரவிக்கும் விதமாகவே தயாரிக்கிறோம். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள்.

உலகப் பத்திரிகை ஆனாலும் இது உங்கள் பத்திரிகை.

சிறப்புப் பகுதி: பொன்னியின் செல்வன்

உள்ளே-வெளியே

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

அறுசுவை

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!