முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க...
வணக்கம்
தமிழ்நாட்டின் கோடைக்காலம் சிறப்பாகத் தொடங்கிவிட்டது. ஆரம்ப வாரங்களிலேயே வெளியே தலை காட்ட முடியாத அளவு வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. நாளுக்கு நாள் இது இன்னும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
போதாக் குறைக்கு வீட்டில் முடங்கியிருக்கச் சொல்லி கொரோனாவும் குரல் கொடுக்கிறது. மாநிலமெங்கும் காய்ச்சல், சுகக் கேடுகள். மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை கூடத் தொடங்கவே, முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து இப்போது மீண்டும் அரசு பேசத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நாம் முன்பே எழுதியதுதான். பாதுகாப்புணர்வு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலட்சியப்படுத்தினால் சிக்கல் நமக்குத்தான்.
நிற்க. இந்த இதழ் கோடை காலச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. கோடைக்கு ஏற்ற உணவு முறையில் தொடங்கி, கோடை கால முகாம்கள் வரை பல பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. படித்து ரசித்து, உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
இந்த இதழின் மிக முக்கியமான அம்சமாக இரண்டு கட்டுரைகளை முன்வைக்கிறோம். முதலாவது, ‘பிள்ளை பிடிக்கும்’ கல்வித் துறை. அடுத்தது, பின்லாந்தில் கல்வித் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கட்டுரை.
முதலாவது, தமிழ்நாட்டின் நிலைமையைச் சொல்கிறது. படிக்கும் மாணவர்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஏன் தேர்வெழுத வருவதில்லை என்று ஆராய்கிறது. இரண்டாவது கட்டுரை, பின்லாந்தில் கல்வி என்பது எவ்வாறு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றப்படுகிறது என்று விளக்குகிறது. நாம் அறியாததல்ல. இங்கிருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் குழு இம்மாதிரி கல்வியிற் சிறந்த பிராந்தியங்களுக்குச் சென்று ஆராய்ந்தறிந்து திரும்புவதும் அறிக்கை தருவதும் எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவர்கள் கண்டறிந்து வந்தவற்றுள் எதுவெல்லாம் ஏற்கப்பட்டன, எதெல்லாம் நடைமுறைக்கு வந்தன என்று நமக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்வெழுதுவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று செய்திகளில் பார்த்துக் கடந்துவிடுகிறோம். இது எத்தனை பெரிய சமூகச் சீர்கேடு என்பதைச் சிந்திப்பதேயில்லை. உண்மையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரச்னை இது. அரசு, கல்வித் துறை, பெற்றோர் என முத்தரப்பும் இணைந்து முனைப்புக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பணக்காரர்கள் அதிகம் இல்லாததால் வீணான மாநிலம் ஏதுமில்லை. ஆனால் படிக்காதவர்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டால் மீள்வது சிரமம். விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
சிறப்புப் பகுதி: கோடை
திசையெலாம்
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...
நம்மைச் சுற்றி
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப்...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம்...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...