பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
வணக்கம்
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான புத்தகக் காட்சி நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் (ஜனவரி 6) தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இம்முறை புத்தகக் காட்சியின் தனிச் சிறப்பு, இது சர்வதேசப் புத்தகக் காட்சியாகவும் உருப்பெறவிருப்பதுதான். 16-18 மூன்று தினங்கள் மட்டுமே என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்துக்கு இது சரியாகவே இருக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல பெரிய பதிப்பு நிறுவனங்கள் இதற்கெனச் சென்னை வருகின்றன. மொழியாக்க ஒப்பந்தங்கள் நிறைய நிகழப் போகின்றன. இதெல்லாம் தமிழ்ச் சூழல் இதற்கு முன் காணாதது. தமிழக அரசின் அக்கறை மிக்க முன்னெடுப்புகளுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு துணுக்குக் கட்டுரைதான். ஆனால் சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்கிறவர்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சென்ற இதழில் அறிவித்திருந்தது போல ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்கள் வெளியீட்டை ஒரு வாசகர் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி நரசிம்மன் மற்றும் காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட, எழுத்தாளர் என். சொக்கன் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கலந்துரையாடுவதுதான். மெட்ராஸ் பேப்பர் குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் நீங்கள் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இதழ் குறித்து. உள்ளடக்கம் குறித்து. மொழி குறித்து. அடுத்தடுத்த முயற்சிகள் குறித்து. எது வேண்டுமானாலும். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் பதிலளிக்கக் காத்திருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்களைச் சந்திப்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து நமது எழுத்தாளர்கள் சென்னைக்கு வருகிறார்கள். நீங்களும் வந்து இணையும்போது நிகழ்ச்சி களை கட்டிவிடும்.
புத்தாண்டைப் புத்தகங்களுடனும் புத்தக விழாக்களுடனும் தொடங்குவது பேருவகை தரக்கூடியது. ஆண்டு முழுதும் இந்த உவகை நீடித்திருக்க வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நம்மைச் சுற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...