Home » Home 03-08-2022

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதி, கல்யாண மார்க்கெட்.

இன்றைய தலைமுறைப் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? எது குறைவதால் அவர்கள் பையன்களை நிராகரிக்கிறார்கள்? அதே போல, திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதன் அடிப்படைக் காரணம் எது? ஜாதகம், கிரகம், தோஷம் என்பதெல்லாம் இன்று ஒன்றுமே இல்லை. அதற்கெல்லாம் வெகு அப்பால் சென்றுவிட்டன நவீன வாழ்க்கை கற்பிக்கும் காரணங்கள்.

இந்தச் சிறப்புப் பகுதிக்காக மெட்ராஸ் பேப்பர் நிருபர்கள் ஏராளமானவர்களுடன் பேசினார்கள். ஒவ்வொருவரின் திருமணப் பிரச்னையின் அடிப்படைக் காரணங்களைக் கேட்டறிந்தார்கள். பெயர், அடையாளங்கள் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்குக் காத்திருக்கும் ஆண்களும் பெண்களும் நம்மிடம் பேசிய அனைத்தையும் தொகுத்து இந்த இதழில் தந்திருக்கிறோம்.

அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களைக் கணிசமாக அதிகரித்திருப்பது இந்த வாரம் உலகெங்கும் பேசப்படும் முக்கிய விவகாரம். இது நல்லதா? கெட்டதா? உலக அளவில் - குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் பத்மா அர்விந்தின் கட்டுரை, நுட்பமும் தீவிரமும் மிகுந்ததொரு பொருளாதார நடவடிக்கையை மிக எளிமையாக விளக்குகிறது.

அமெரிக்க உளவுத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் அல் காயிதாவின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி குறித்து பா. ராகவனும் இலங்கையின் அதிகார வர்க்கம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியத்தைக் குறித்து ஸஃபார் அஹமதும் எழுதியிருக்கிறார்கள்.

கடந்த வாரம், நிகோஸ் அன்றோலாகிஸ் என்கிற கிரேக்க அரசியல்வாதியின் போனுக்கு அனுப்பப்பட்ட Predator என்னும் உளவு மென்பொருள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கதி கலக்கிய சம்பவத்தைச் சுட்டி, சாமானியர்கள் உள்பட அனைவரும் இந்த உளவு மென்பொருள்களிடம் இருந்து தப்பித்தாக வேண்டிய இருப்பியல் நெருக்கடியை விவரிக்கிறார் ஜெயரூபலிங்கம்.

வாரம்தோறும் இடம்பெறும் ஒவ்வொரு கட்டுரையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக அமைய வேண்டும் என்று பார்த்துப் பார்த்து நாங்கள் இதழைத் தயாரிக்கிறோம். மிக விரைவில் மேலும் மகிழ்ச்சி தரத்தக்க சில புதிய அம்சங்கள் மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கவிருக்கின்றன.

உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். தரமான வாசிப்பில் இருந்து விலகிச் செல்லும் இந்தத் தலைமுறைக்கு எண்பது, தொண்ணூறுகளின் பொற்கால வாசிப்பு ருசியை மீள் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் மெட்ராஸ் பேப்பரை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அவர்களை நமது சந்தாதாரர்களாக்குங்கள்.

இது வெறும் இதழல்ல; ஓர் இயக்கம் என்பதை உங்களைத் தவிர வேறு யாரால் உரக்கச் சொல்ல முடியும்?

சிறப்புப் பகுதி: கல்யாண மார்க்கெட்

உள்ளங்கை உலகம்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

நாலு விஷயம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!