Home » Home 27-07-22

வணக்கம்

உடல் எடை ஏற்றம் என்பது இன்று உலகம் முழுதும் பெரும்பாலானவர்கள் கவலை கொள்ளும் பிரச்னை. உட்கார்ந்து செய்யும் வேலைகள் பெருகிவிட்டதே முதன்மைக் காரணம். உழைப்பைத் தர இயலாதபோது உடல் எடை கூடிப் போகிறது. உபரியாகச் சில நோய்கள், சிகிச்சைகள்.

இந்த இதழின் சிறப்புப் பகுதி அதைத்தான் ஆராய்கிறது. பல்வேறு விதமான டயட் முறைகள் இதில் விவாதிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான - ஆனால் யாரும் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாத பேலியோ டயட் குறித்து நியாண்டர் செல்வன் விரிவாக விளக்கி இருக்கிறார். மாரத்தான் வீரர் பூவராகன், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவோர் சாப்பிட வேண்டிய விதத்தை விளக்குகிறார். பெண்களுக்கான எடைக் குறைப்பு டயட், மன அழுத்தத்தால் அதிகம் உண்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீளும் வழி என்று இப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உபயோகமானவை.

இது ஜனாதிபதிகளும் பிரதமர்களும் மாறும் காலம். இலங்கையின் புதிய ஜனாதிபதி ஆகியிருக்கும் பழைய ரணில் விக்கிரமசிங்கே எதிர்கொள்ள வேண்டிய சவால்களை ஸஃபார் அஹ்மத் விளக்குகிறார். அவல நகைச்சுவை என்றால் என்னவென்று மிகத் துல்லியமாகப் புரிய வைக்கும் கட்டுரை அது. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரபு பாலா அறிமுகம் செய்கிறார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வுக்கான போட்டிக் களத்தில் நிற்கும் இருவரை ஜெயரூபலிங்கம் படம் வரைந்து பாகம் குறிக்கிறார்.

பிரிட்டனிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வாரம் திடீரென்று வெப்ப நிலை உயர்ந்து, செய்திகளில் பரபரப்பானதை அறிந்திருப்பீர்கள். அது குறித்த விளக்கமான கட்டுரையும், சொல்லி வைத்தாற்போல அதே விஷயத்தைக் கதறக் கதறக் கிண்டலடிக்கும் சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரையும் ஒருசேரப் பிரசுரமாகியிருக்கின்றன. இரண்டையும் அடுத்தடுத்துப் படித்தால் குறைந்தபட்சம் ஒரு புன்னகை, அதிகபட்சம் ஒரு வெடிச் சிரிப்பு நிச்சயம்.

உலக அளவில் முக்கியத்துவம் பெறும் விவகாரங்களைக் குறித்துத் தமிழில் எளிமையாகவும் தொடர்ச்சியாகவும் எழுதும் ஒரே பத்திரிகை மெட்ராஸ் பேப்பர் மட்டுமே. நீங்கள் ரசிக்கும் இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி சந்தா செலுத்தச் சொல்லுங்கள். தமிழ் இதழியலில் இது ஒரு புதிய முயற்சி என்பதைப் புரியவையுங்கள்.

ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.

சிறப்புப் பகுதி: டயட்

சுற்றும் பூமி

அறுசுவை

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
error: Content is protected !!