Home » சென்னை புத்தகக் காட்சி 2024 – 1
புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2024 – 1

47வது சென்னை புத்தகக் காட்சியை 03-01-2024 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அரங்க மேடையில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் நிதியைக் கொண்ட விருது அது. இதில் உரைநடைக்காக பேராசிரியர்.ஆர்.சிவசுப்ரமணியனுக்கு பதிலாக ரத்தினசபாபதி பெற்றார். கவிதைக்கான விருதை உமா மகேஸ்வரி, நாவலுக்கான பரிசை தமிழ்மகன், சிறுகதைக்கான விருதினை அழகிய பெரியவன் ஆகியோர் பெற்றனர். 6 சிறந்த படைப்பாளர்களுக்கான கலைஞர் பொறிகிழி விருதைத் தொடர்ந்து சிறந்த பதிப்பாளர், நூலகர் போன்ற விருதுகளை பபாசி சார்பாகவும் வழங்கி கௌரவித்தார் அமைச்சர் உதயநிதி.

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துச்சொல்லி பேசினார். சிறப்பு விருந்தினராக மட்டுமல்ல… பதிப்பாளராகவும் கலந்துகொண்டதற்காக மகிழ்ச்சியடைந்தார். முதல்வர் வரமுடியாத காரணத்தால் முதல்வரின் வாழ்த்து மடலை வாசித்தார். ”தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதேநேரம் 47-வது புத்தகக் கண்காட்சி பெரும் வெற்றியை பெற எனது வாழ்த்துகள். ஒருங்கிணைத்த பபாசிக்கு பாராட்டுகள். இந்தாண்டும் பன்னாட்டு புத்தகக்காட்சி நடக்கும். ஆறு கோடி செலவில் ஜனவரி 16, 17, 18- ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 38 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதற்காக 20 இலக்கிய முகவர்களுக்குப் பயிற்சி தந்து உருவாக்கியுள்ளோம். இவர்கள் எழுத்தாளர்களுக்கும், வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் பாலமாக இருப்பார்கள். இதுதவிர, இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் இளைஞர் இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை பள்ளியிலேயே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய சிந்தனைகளை கல்லூரி மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். இவை தமிழ்ப்பற்றை உருவாக்கும்” என்று வாசித்து முடித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!