Home » சென்னை புத்தகக் காட்சி 2024 – 2
புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி 2024 – 2

இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்காக வந்துள்ள புதிய புத்தகங்கள் குறித்தும், அதில் எவை பேசப்படும் புத்தகங்களாக இருக்கும் என்பதைக் குறித்தும் தெரிந்துகொள்ள சில பதிப்பகங்களைத் தொடர்புகொண்டோம். அவர்கள் கூறியது…

என்.சி.பி.எச் – சண்முகநாதன்

நாங்கள் எழுபத்து மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறோம். தமிழ்நாடு முழுவதும் பதினெட்டுக் கிளைகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருபதாயிரம் புத்தகங்களுக்குமேல் புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். இவற்றில் மறுபதிப்பும் உண்டு. சமீப காலமாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களின் புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. நூறு புத்தகங்களுக்குமேல் அவருடையதை வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டு ‘என்ன பேசுவது? எப்படி பேசுவது?’ என்ற புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். ஒருவாரத்தில் மூவாயிரம் பிரதிகள் விற்றுள்ளன. மலிவு விலையாக ஆயிரம் ரூபாய்க்குப் போட்டுள்ளோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!