Home » ஒட்டகப் பால் சாக்லெட் (சமைத்துப் பார்-க்காதே.)
நகைச்சுவை

ஒட்டகப் பால் சாக்லெட் (சமைத்துப் பார்-க்காதே.)

ஒட்டகப் பால் உருமாறிய வரலாறு

வெற்றி தோல்வியா பெரிது? வித விதமாகச் செய்து பார்ப்பதுதான் பெரிது. ஒட்டகப் பாலில் டீ போட நினைத்து சாக்லேட் செய்து முடித்த கதையை விவரிக்கிறார் சிவசங்கரி வசந்த்.

‘ஒட்டகப் பால்ல டீ போடுடா, ஒட்டகப் பால்ல டீ போடுடானு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்’ என்ற வடிவேலுவின் அந்த கிளாசிக் காமெடி தொலைக்காட்சியில் வந்தது. நான் முதல் முதலில் அபுதாபிக்கு வரும்போது கண்டிப்பாக ஒட்டகப் பாலில் போட்ட டீயைக் குடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தேன்.

பதினொரு வருடங்கள் முடிந்து விட்டன. இது வரை அந்த ஆசை நிறைவேறவில்லை. அபுதாபியில் இருந்து அஜ்மன் வரை, சிறிய டீ கடையில் இருந்து பெரிய அரேபிய உணவகம் வரை பார்த்து விட்டேன். பூதக் கண்ணாடி வைத்து மெனு கார்டை ஆராய்ந்தும் கூட ஒட்டகப் பால் டீ தட்டுப்பட்டதில்லை! சரி, தன் கையே தனக்குதவி. இன்றே ‘ஒட்டகப் பால் வாங்கி டீ போடுறோம், குடிக்கிறோம்’ எனக்குள் சூளுரைத்துக் கொண்டேன்.

வழக்கமாகப் பொருள்கள் வாங்கும் கடைக்கு போன் செய்து ஒரு லிட்டர் ஒட்டகப் பால் வேண்டும் என்று கேட்டேன்.

‘அக்கா, நம்ம கடை லிஸ்டிலேயே ஒட்டகப் பால் கிடையாதே. உங்களுக்கு எதுக்கு அது? குழந்தைகளுக்கா கொடுக்கப் போறீங்க? வேணாக்கா.’ என்றார் கடைக்கார நல்லதம்பி.

அட அப்படிக் குறுக்கே விழுந்து தடுக்கும் அளவுக்கா அது மோசம்? ம்ஹும். பார்த்தே விடுவது. அதே கடைக்காரரிடம் பொண்ணு ஸ்கூல் ப்ராஜக்ட் என்று ஒரு இலக்கியத்தரமான கதையைச் சொல்லி, எப்படியாவது ஒட்டகப் பால் வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் நான்கைந்து கடைகளில் விசாரித்து, எப்படியோ ஒரு கடையில் ஒட்டகப் பால் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார்.

ஒரு லிட்டர் ஒட்டகப் பால் பதினேழு திர்ஹாம். இதே ஒரு லிட்டர் மாட்டுப் பால் என்றால் ஆறு திர்ஹாம்தான். ஒட்டகம்தான் உயர்ந்த உருவம் என்றால் ஒட்டகப் பாலும் உயர்ந்த விலையாகத்தான் இருக்க வேண்டுமா?

சரி ஒழிகிறது என்று கேட்டதைக் கொடுத்து வாங்கினேன். அவ்வளவு காஸ்ட்லி பாலில் கேவலம் டீதான் முதலில் போட வேண்டுமா? மங்களகரமாகப் பால்கோவா செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

நம்ம ஊர் சாத்தானோ, இந்த ஊர் ஷைத்தானோ அப்போது விளையாடத் தொடங்கியது…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஒட்டகப் பால் சாக்லேட்:

    அட! பெயரை பார்த்ததும் மனம் கற்பனைச் செய்ய ஆரம்பித்தது.

    ஊரோ போரோ, கோயிலோ கோட்டையோ மனதில் கட்டி பார்த்துவிடலாம். ஆனால் ஒரு உணவை சுவையை எங்கனம் கற்பனைச் செய்வது அதை சுவைக்காமல்.

    இவ்வாறான புது பதார்த்தங்களை சுவைப்பதில் எப்போதும் அலாதி ஆவல் உண்டு எனக்கு. அவ்வப்போது எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலும் (அதாங்க R&D Department), இந்தோ- அரபிக், இந்தோ- மங்கோலியன் பதார்த்தங்களை முயற்சித்து பார்ப்பதுண்டு.

    சரி சமையல் செய்முறை தெரிந்து கொள்ளலாம் என வாசித்தால், பிரியாணியில் சிக்கும் திராட்சையாய் ஆங்காங்கே புன்னகைக்க வைத்தது படைப்பாளரின் எழுத்துநடை.

    நம்ம ஊர் சாத்தானோ , இந்த ஊர் ஷைத்தானோ 🙂 🙂 🙂

  • இரண்டாவது படத்திலேயே பால்கோவா வந்து விட்டது போல தோன்றுகிறது…. ஆனாலும் கடைசி வரை விடா முயற்சியால்… சாக்லேட் வரை சென்று எங்களுக்கெல்லாம் நகைச் சுவை விருந்தாக்கியதற்கு நன்றி…

  • சாக்லேட்டை பார்த்தாலே மிக்க சுவையாக உள்ளது.படிக்கவும் மிக்க சுவை!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!