Home » Archives for தி.ந.ச. வெங்கடரங்கன் » Page 2

Author - தி.ந.ச. வெங்கடரங்கன்

Avatar photo

அறிவியல்-தொழில்நுட்பம்

காதலிக்க வலதுபுறம் தள்ளவும்

சுயம்வரம், கந்தர்வ விவாஹம், குடும்பத்திற்குள் பெரியோர்கள் முடிவு செய்வது என்று பல வகைத் திருமண ஏற்பாடுகள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இன்றைக்குப் பல நாடுகளில் நிலைமை முதலில் காதல், திருமணத்தைப் பின்னர் பார்க்கலாம் என்று மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு ஒரு படி மேலே போய் திருமணங்களின் எண்ணிக்கையே...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

வேகம் ஒன்றே மூலதனம்

வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில் ஒரு வேலையாக வந்திருப்பதாகவும், அடுத்த பதினைந்து நிமிடங்களில் வந்துவிடுவோம் என்றார்கள். தாராளமாக வாருங்கள் என்று அழைத்தாலும், மனத்தில் பதற்றம் வந்தது...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

காதுக்குள் வானொலி

எண்பதுகளில் தமிழ்நாட்டு மக்கள் பலரும் காலை எழுந்தவுடன் கேட்டது வானொலியில் ஒலிபரப்பான தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியை. ஒரு குட்டிக் கதையோடு ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் வாழ்க்கைத் தத்துவங்களை அவருடைய பாமர உச்சரிப்பில் கேட்கும் சுகமே அலாதியானது. இருபது ஆண்டுகள்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

டீப்சீக் : ஒரு திடீர் பூகம்பத்தின் நிஜமான பின்னணி

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது சீனாவின் இந்த புதிய வெளியீடு. அமெரிக்காவுக்குச் சீனா விடுத்துள்ள ‘எச்சரிக்கை மணி’ என்று இதை அழைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்படி என்ன நடந்துவிட்டது? இந்த உலகத்தை வருங்காலத்தில் ஆளப் போவது செயற்கை நுண்ணறிவு. அப்படியான துறையில் நாங்கள்தான்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

பதில் சொல்லும் புதிய பூதம்!

ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நாம் உடனே போவது கூகுள் தேடுபொறிக்கு. கடந்த இருபது ஆண்டுகளாக கூகுள் தேடுபொறிக்கு இணையான தரத்தில் மாற்றாக வேறு எதுவுமே அருகில் கூட வர முடியாத நிலையில், தற்போது வந்து இருக்கிறது பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI). உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த செயலி நம்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

அழைப்பது நீதானா?

“நாங்கள் இந்தியாவைத் தேடி வரவில்லை, இந்தியா எங்களைக் கண்டு கொண்டது” என்று வெளிப்படையாகச் சொன்னார் நமி ஜர்ரிங்கலாம் (Nami Zarringhalam). அவர் குறிப்பிட்டது, 2009ஆம் ஆண்டு ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் அவரும் அலன் மமேடியும் (Alan Mamedi) தொடங்கிய ட்ரூகாலர் (TrueCaller) செயலியின் வியாபார ரகசியத்தை. இன்று...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

சும்மா இரு, மரம் வளரும்!

பலருக்கும் குளியல் அறையில்தான் பாட வரும் என்று கேலியாகச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையிலேயே கழிப்பறையில் இருந்த போது தோன்றிய யோசனையானது இன்று பெரிதும் புகழப்படும் ஒரு செயலியாக வளர்ந்திருக்கிறது. அதைப் பற்றிப் பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஐபோனில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

கூகுள் படக்கதை

ஒரு காலத்தில் நம் வாழ்வின் முக்கியமான தருணங்களை நினைவில் வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவியவை புகைப்படங்கள். இன்றைக்கு அதுவே செல்பேசியில் எண்ணிமப் படங்களாக உருமாறிவிட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன்பும் செல்பேசியில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டாலும் அவற்றைப் பாதுகாப்பது மிகக் கடினமாகவே இருந்தது...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

விளையாட்டல்ல வெற்றி

இரயில் நிலையத்தின் கிடங்கு ஒன்று. அங்கே அனுமதியில்லாமல் சுவரோவியம் வரைகின்ற பையனைப் பிடிக்க ஓடி வருகிறார் பாதுகாவலர். உடன் அவருடைய நாயும். வழி எங்கும் பொற்காசுகள் சிந்தியிருக்கிறன. இப்படியான ஓர் ஓட்டம் கடந்த பத்தாண்டுகளாக நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது என்றால் நம்ப முடியுமா? இதைப்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

டிக் டாக் : ஆறுதலும் அபாயமும்

அமெரிக்காவில் இருக்கும் கோடிக்கணக்கான பதின் பருவத்தினருக்குத் தற்போதைய மிகப் பெரிய கவலை, 19 ஜனவரி 2025 அன்று வரவிருக்கும் ‘டிக் டாக்’ செயலிக்கான தடை. இந்தியாவில் திறன்பேசி வைத்திருக்கும் முக்கால்வாசி நபர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களைச் செலவழிக்கும் யூ-ட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) செயலியின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!