சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத் திருவிழாவில்? ஏன் இதற்கு வரலாற்று முக்கியத்துவம்? பங்குனிப் பெருவிழாவில் என்னென்ன விசேஷங்கள் நடக்கின்றன? மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்...
Author - சிவராமன் கணேசன்
மம்மியாக பதப்படுத்தப்பட்ட உடல்கள், ஐயாயிரம் வருடங்களுக்குப் பின்பும் வாசனையுடன் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம்? எப்படி இறந்த உடல்களை மம்மியாக்கிப் புதைக்கிறார்கள்? எப்படி இந்த வாசனை அப்படியே இருக்கிறது? மம்மி என்ற சொல் மும்மியா என்ற பாரசீகச் சொல்லிலிருந்து...
‘முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் என்று அறியப்பட்ட ஒளரங்கசீப், காலத்தின் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்று, அதன் விளைவாக அதை நிறுத்தி பிறகு உடைத்தும் விட்டார்’ என்று நேரு கூறியிருக்கிறார். தனது மதவெறி கோட்பாடுகளாலும், இந்திய மக்களின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியாலும் அவர்...
புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படும் மகாபோதி கோயில் பௌத்தர்களுடையதுதானா அல்லது இந்துக்களுக்குச் சொந்தமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதற்கான சில அடிப்படைச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக பௌத்தத் துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தகயாவும், மகாபோதியும் பௌத்தர்களுக்கு...
குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள்...
கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள்...
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. திமுகவுக்கு வலுவான மாற்றாக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அண்ணா...
தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாகத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது...
இந்தியக் கடற்படையில் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டன. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது முதற்பெருமை. நுட்பத்திலும், திறனிலும் சர்வதேச வல்லமை கொண்டவை என்பது இரண்டாவது. ஐஎன்எஸ் வாக்ஷீர், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என்பன இந்த மூன்று புதிய தயாரிப்புகளின் பெயர்கள்...
பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது. ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான...