காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புக் கேபினட் கமிட்டி (Cabinet Committee on Security – CCS) விரைவாக முடிவுகளை எடுத்து அறிவித்தது...
Author - கோகிலா
பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில் சுமந்து கொண்டு தன்னுடைய மண் குடிசையை நோக்கி ஓடினார். பஹல்காம், பைசரன் மைதானத்தில் இருந்து அவர்கள் வீடு ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அன்று வழக்கம்போலச்...
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து...
குவாதர் சர்வதேச விமானநிலையத்தின் உரிமையாளர் பாகிஸ்தான். பணம் கொடுத்தது சீனா. பயன்படுத்த யாருமில்லை. கடந்த வாரம் முழுக்க சொல்லிவைத்தாற்போல் எல்லா செய்தித்தளங்களும் பயணிகள் யாருமில்லாத விமான நிலையம் என கேலியான தொணியில் செய்தி வெளியிட்டிருந்தன. மற்றவர்களுக்கு எப்படியோ, இந்தியா அப்படிச் சிரிப்புடன்...
ஏரிகளுக்கும் படகு வீடுகளுக்கும் புகழ்பெற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு வறட்சியை எதிர்கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, அரசின் நீர் மேலாண்மைத் துறையான ஜல் ஷக்தி எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். திடீரென நீர் நெருக்கடியை...
பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா. தன்னாட்சி பெற்ற திபெத் பகுதியில் உருவாகும் இந்த நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியது. இதைப் பற்றி இந்தியாவுக்கு இருக்கும் கவலை...
இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ். வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று...
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நல்லபடியாகத் தொடங்கியது. ஞாயிறு அன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் மூவரை ஹமாஸ் விடுவிக்க, தங்கள் சிறையில் இருந்த தொண்ணூறு பாலஸ்தீனிய பெண்களையும் சிறுவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது. அக்டோபர் ஏழு தாக்குதலில் கொல்லப்பட்ட யூதர்களுக்குப் பதிலாக நாற்பது மடங்கு...
டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் சந்திப்பில் மியான்மர் நாட்டுக்கான தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என முடிவானது. அதே நாளில் மியான்மர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான அராக்கன் ஆர்மி, ராகினி மாநிலத்தில் முக்கியமான ராணுவத் தளத்தைக் கைப்பற்றியதாகச்...
திரிபுரா, கொல்கத்தாவில் இருந்து தங்கள் தூதரக அதிகாரிகளை பங்களாதேஷ் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. கனடா இந்தியா உறவுத் தடுமாற்றம் உண்டாகி வெகு நாள்கள் ஆகவில்லை. அதற்குள் இன்னொன்று. இந்தியர்களும் உயிரைக் கொடுத்துப் பெறப்பட்டது பங்களாதேஷ் விடுதலை. அண்டை நாடுகள் என்பதைத் தாண்டிய உணர்வுப் பூர்வமான உறவு...