எழுபதாண்டுகள் பணியாற்றிய பின்னர் தொண்ணூற்றிரண்டாவது வயதில் ஒருவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அது உலகெங்கும் பெரிய செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வெளி வருகிறது. காரணம் ஊடகத்துறையில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் அவர் என்பதே. அந்தத் தொண்ணூற்றிரண்டு வயதில் தனது இரு...
Author - ந. ஜெயரூபலிங்கம்
இளைஞர்களைக் கவரக் கூடிய பிரசார வீடியோக்களை உருவாக்குவதில் பிரபலமான தீவிரவாத இயக்கம் ஒன்று. அவ்வீடியோக்களில் வருபவர்களின் முகம் அடையாளம் தெரியாதளவு முகமூடிகள் அணிந்து கொள்வதும் பொதுவான செயல்முறை. அப்படியான ஒரு இயக்கம் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைப் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வீடியோவினை...
ஆப்கானிஸ்தான் என்றால் உள்நாட்டுப் போரும் தாலிபன் இயக்கமும்தான் பொதுவாக நினைவுக்கு வருபவை. ஆனால் இந்த நாடு இயற்கை வளங்கள் அதிகமுள்ள ஒரு நாடு என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. செம்பு, லிதியம் போன்ற உலோகப் பொருட்களும், இரத்தினக் கற்களும் ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களில் முக்கியமானவை. பாஞ்ஷிர்...
ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சட்டவிரோதமான முறைகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பல்லாயிரங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் கணக்கில் வராமல் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்தோர்களின் கணக்கு யாருக்கும் தெரியாது. அதைவிடப் பயணத்தை ஆரம்பித்து வழியில் தொலைந்து போனோர்களின்...
இந்த வாரம் சனிக்கிழமை, ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாகிஸ்தானிய அரசியலில் ஒரு புதிய திருப்பம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தேசிய நாயகனாகக் கருதப்பட்ட ஒருவர் இந்த வாரம் நீதி மன்றத்தினால் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுக் காவலர்களால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் யார்? பாகிஸ்தான் கிரிக்கெட்...
2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் வெப்ப நிலை முதல் தடவையாக 40°C க்கு மேலாகச் சென்று இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலைகளில் அதிகூடியதாக வரலாறு படைத்ததாக ஒரு கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியிட்டோம். இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்தில் அந்தளவுக்கு வெப்பநிலை ஏறவில்லை. ஆனாலும் இவ்வாண்டு ஜூன் மாதம் சராசரி...
இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுப் பரீட்சைகளுக்குத் தயாராகப் பல வருடங்களாகப் பெற்றோரும் மாணவர்களும் உழைக்கிறார்கள். ஐஐடி எனும் பிராண்ட் இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும்...
சென்ற வாரம் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவை வந்தடையும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிப் பார்த்தோம். இது முக்கியமாகச் சிறிய படகுகளில் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து நோக்கி மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சிறு...
29 ஜூன் 2023 இங்கிலாந்தின் அப்பீல் கோர்ட் பிரித்தானிய அரசின் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் கொள்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. பிரதமர் ரிஷி சுனக், ‘இத்தீர்ப்புத் தவறானது. ருவாண்டா ஒரு பாதுகாப்பான நாடு. நாம் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவோம்’ என்று அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைத்...
நான்கு வருடங்களுக்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களோடு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதில் முன்னணியில்...