Home » Archives for ஸஃபார் அஹ்மத்

Author - ஸஃபார் அஹ்மத்

Avatar photo

உலகம்

‘அதானி வேறு; இந்தியா வேறு’ – அநுரவின் அசகாய அரசியல்

காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...

Read More
உலகம்

உலராத உதிரமும் புலராத பொழுதும்

கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த உலகத்தில் நடந்த மிகப் பெரும் நில அபகரிப்பின் வலிகளும், போராட்டங்களும் தேவையில்லாத ஒன்று. வரலாறு நெடுகிலும் நடந்த யுத்தங்களும், பலியான லட்சக்கணக்கான...

Read More
உலகம்

இலங்கை: அடங்கியிருக்கும் இனவாதம்

நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...

Read More
ஆண்டறிக்கை

குற்றங்களின் பங்குதாரி: ஸஃபார் அஹ்மத்

வருடம் ஒன்று உருண்டோடி முடியும் போது அந்த வருடத்தில் என்ன என்ன செய்தேன் என்று சுயபரிசோதனை செய்து கொள்வதைவிட வயது ஒன்று கழிகிறதே என்றுதான் எனக்கு பிரச்சினையாகிவிடுகிறது. என் காதருகே கொஞ்சம் நரை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்க திடீர் திடீர் என்று விபரீதக் கவலைகள் சூழ ஆரம்பித்து இருக்கின்றன. தெனாலி...

Read More
உலகம்

அநுரவின் இன்னிங்ஸ் ஆரம்பம்

ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...

Read More
உலகம்

இடப்பக்கம் திரும்பு

கடந்த பதினான்காம் தேதி நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கருத்துக் கணிப்பாளர்களும் எதிர்பார்க்காதது நடந்தது. எந்தவொரு அரசியல் விமர்சகர்களும் கனவு கூடக் காணாத ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுபத்தொரு சதவீத வாக்குகளைப் பெற்று மொத்தம் இருநூற்று...

Read More
உலகம்

இஸ்ரேலின் புதிய ஜெரூசலம்!

அந்தச் செய்தி இலங்கை சுற்றுலாத்துறைக்கு இடியாய் இறங்கிய தினம் அக்டோபர் 23. ‘அருகம்பை’ எனப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் சுற்றுலாச் சொர்க்கபுரியில் இருந்து தம் பிரஜைகளை வெளியேறுமாறு அமெரிக்கத் தூதரகம் அப்படி ஒரு நான்காம் தர எச்சரிக்கை அறிக்கையை விடுக்கும் என்று...

Read More
உலகம்

இலங்கையின் ஷெர்லக் ஹோம்ஸ்

எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...

Read More
உலகம்

சவால் விட யாருமில்லை!

இது ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்று வெற்றிகரமான இரண்டாவது வாரம். சந்தேகமே இல்லை. ஆக்சன் திரைப்படம் தான், கமர்ஷியல் மஷாலா தான் என்று தான் ரசிகப் பெருமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.காரணம் ஜே.வி.பி இன் பின்புலம் என்பது அதிரடி, சரவெடி பட்டாசு போன்றது. அதுமட்டுமல்ல, மேடை தோறும் அநுரவும், அவர்...

Read More
உலகம்

அதிபரான தோழர்

கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!