வணக்கம்

சரியாக ஒரு மாதத்தில் சென்னை புத்தகக்காட்சி ஆரம்பமாகிறது. சென்னையின் தனிப்பெரும் அடையாளங்களுள் ஒன்றான இத்திருவிழாவில் இந்த முறை நமது மெட்ராஸ் பேப்பர் பத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் இந்தப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறது. நமக்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்றொரு இம்ப்ரிண்டையே அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

எண்ணிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. BukPet எழுத்துப் பயிற்சி வகுப்புகளுக்கு வந்து, எழுதக் கற்றுக்கொண்டு மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதி, எழுத்து என்னும் செயல்பாட்டுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் நெருங்கிக் கலந்து, இன்று தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு ஓர் அணி உருவாகியிருக்கிறது. இவர்கள் யாரும் இதற்கு முன் பெரிதாக எழுதியவர்களல்லர். பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். உலகின் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு தொழில் செய்பவர்கள். வெவ்வேறு வயதினர். எழுத்தார்வம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தவர்கள்.

இந்தப் புதியவர்களின் புத்தகங்களே இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கப் போகிறது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவற்றுள் சில மெட்ராஸ் பேப்பரில் தொடர்களாக வந்தவை. நேரடியாக எழுதப்பட்ட புத்தகங்கள் சிலவற்றில் இருந்து மட்டும், சில பகுதிகளை இந்த இதழில் உங்கள் வாசிப்புக்குத் தந்திருக்கிறோம். மற்றவை, அடுத்த வாரம் வரும்.

இந்தப் புத்தகங்களின் வெளியீட்டை ஒரு கொண்டாட்டமாக்க மெட்ராஸ் பேப்பர் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நாம் கூடலாம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பாக அந்நிகழ்ச்சி அமைய விரும்புகிறோம். பல்வேறு நாடுகளில் வசிக்கும் நமது எழுத்தாளர்கள் இதற்காகவே அன்று சென்னை வருகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல் தயாரானதும் இங்கே அறிவிக்கிறோம். இது நம் குடும்ப விழா. கூடிக் களிப்போம்.

 • உலகம் யாவையும்

  சமூகம்

  பாலின பேதமற்ற சமூகம் சாத்தியமா?

  பிருஹன்னளையாக அர்ச்சுனனும், மோகினி அவதாரமாக திருமாலும் இதிகாசங்களில் தங்களை முழுமையாகப் பெண்ணாக உணர்ந்து செயல்பட்ட தருணங்களும் அதைக் கொண்டாடும்...

  உலகம்

  குற்றம்: நடப்பது என்ன?

  நூற்று இருபத்தொன்பது ஆண்டுகள்.! பீட்டர் ஜெரால்ட் ஸ்கல்லி என்பவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டைனை இது. ஆஸ்திரேலியரான இவர் மீது...

  உலகம்

  ஈரான்: இன்னொரு புரட்சி?

  கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஈரானும் அமெரிக்காவும் மோதியது ஒன்றும் செய்தியல்ல. ஆனால் அதன் பின்னர் நடந்தது தான்...

  சிறப்புப் பகுதி: புத்தக முன்னோட்டம்

  புத்தகம்

  பிரியாணி: ஒரு வாசமிகு வரலாறு

  ஆறு நிமிடத்தில் பிரியாணி ரெடி அது, தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கனிமொழி எம்.பி-யை நேர்காணல் கண்ட ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களா?‘ என்று...

  நகைச்சுவை

  ‘லை’ கிரியேட்டர் என்றொரு கருவி

  ‘லை டிடெக்டர்’ என்றொரு கருவி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே… அதனைப் பயன்படுத்தினால் ஒரு மனித ஜீவன் பொய் பேசுகிறதா, உண்மை...

  புத்தகம்

  ராகுல்

  ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்...

  புத்தகம்

  க்ரீன் கார்ட்

  அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை ஏன் வேண்டும்? ஆரம்ப காலங்களில் குடியேற வந்த பலர் எண்ணியதுபோல அமெரிக்கச் சாலை வீதிகளில் தங்கம் கொட்டிக்கிடக்கவில்லை...

  புத்தகம்

  சூஃபி ஆகும் கலை 

  நீரில் நடந்த பாமரன்  ஆற்றங்கரையில் இருந்த பெரிய மரத்துக்கு அடியில் சூஃபி ஞானி ஒருவர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். பல்வேறு ஆன்மீகப் பயிற்சிகளை...

  புத்தகம்

  தளிர்

  கெட்ட பையன் இப்படியே, வழக்கமான வாழ்க்கையோடு பத்து நாள் பறந்துபோனது. பள்ளியில் நடாஷாவுக்குச் சில தோழிகள் கிடைத்துவிட்டார்கள். அனுஷா, பூனேக்காரப்...

  சிந்திக்கலாம்

  நம் குரல்

  ‘பப்பு’வைக் கண்டு என்ன பயம்?

  ‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர...

  புத்தகக் காட்சி

  அடி பட்டுத்தான் கற்றுக்கொண்டோம் – ஜீரோ டிகிரி ராம்ஜி, காயத்ரி

  தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத்...

  இலக்கியம் சிறுகதை

  வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்

  ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி. குப்புசாமி என் கணவர் வயிறாரச் சாப்பிடுபவர். ஆனால், இப்போது சோர்வாக, சிடுசிடுப்பாகக் காணப்படுகிறார். வாயிலிட்ட உணவை...

  நுட்பம்

  எல்லாம் ‘சிம்’ மயம்

  சமீபத்தில் என் ஐபோனின் சிம் கார்டை ‘இ-சிம்’மாக, அதாவது சிலிகான் அட்டையாக இல்லாமல் மென்பொருளாக மாற்ற ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கடைக்கு சென்றேன். என்...

 • இதழ் தொகுப்பு

  December 2022
  M T W T F S S
   1234
  567891011
  12131415161718
  19202122232425
  262728293031  
 • தொடரும்

  உயிருக்கு நேர் தொடரும்

  கடவுளுக்குப் பிடித்த தொழில் – 2

  மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...

  Read More
  குடும்பக் கதை

  ஒரு குடும்பக் கதை-28

  கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா வாழ்கிறது என்றார் காந்திஜி. ஜவஹர்லால் நேருவின் எண்ண ஓட்டமும் அப்படித்தான் இருந்தது. ஆகவே, யமுனை நதிக்கரையில் சந்தித்த அந்த விவசாயிகளை, அவர்களின் கிராமங்களுக்கே சென்று சந்தித்துப் பேச முடிவு செய்தார் ஜவஹர்லால் நேரு. அலகாபாத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். தங்கள்...

  Read More
  தல புராணம்

  ‘தல’ புராணம் -2

  பெப்சி ராணி சென்ற ஆண்டில் ஒருநாள். அலுவலகத்தில் நானும் எனது சக ஊழியரும் பணி சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எமது நிறுவனத்தின் சட்ட வல்லுநர்களில் ஒருவர் வந்து எம்மிருவரிடமும் பேச வேண்டுமென்றார். நாங்களும் எமது நான்கு செவிகளையும் அவர் சொல்லப் போவதைக் கேட்கத்...

  Read More
  உயிருக்கு நேர் தொடரும்

  உயிருக்கு நேர் -2

  ​ திரு அருட்பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க அடிகள் ​ அறிமுகம் ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாது இருக்க வேண்டும் பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்...

  Read More
  தொடரும் நாவல்

  ஆபீஸ் – 28

  28 வேட்கையும் பிரசாதமும் மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல்...

  Read More
  error: Content is protected !!