2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 952 சிறை மரணங்களுடன் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 172 சிறை மரணங்களுடன் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது தமிழகம்.
கைது செய்யப்பட்ட நபர் போலிஸ் காவலிலோ நீதிமன்றக் காவலிலோ இருக்கும்போது நிகழும் மரணங்கள் சிறை மரணங்கள் (Custodial Deaths அல்லது Lockup Deaths) எனப்படுகின்றன. சிறை மரணங்களுக்கு உடல்நலக்கோளாறு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்கொலை இரண்டாவது காரணமாகவும் உடல் ரீதியிலான துன்புறுத்தல் மூன்றாவது காரணமாகவும் கூறப்படுகின்றன.
புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிக அளவில் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தாலும் அதைக்குறித்துப் புகார்கள் பதியப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. போலிசார் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்தை மனதிற்கொண்டு செயல்படுதல் போன்ற காரணங்களால் கைதிகளை உடல்-மன ரீதியிலாகத் துன்புறுத்துகிறார்கள்.
Add Comment