Home » Home 26-04-23

வணக்கம்

இந்த இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற கையோடு, நகரின் பதினெட்டு நூலகங்களில் ஒரே நாள்-ஒரே நேரம் உலகப் புத்தக தின விழாவைக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் அவர். பல்லாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நூலகத் துறை இப்போது விழித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் உற்சாகமாகச் செயல்படவும் தொடங்கியுள்ளது. இந்தப் பேட்டியில் மனுஷ், நூலக இயக்கம் சார்ந்த தமது திட்டங்களை விரிவாக விளக்கியிருக்கிறார்.

தொழில்நுட்பம் சார்ந்த நான்கு முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஷீட்ஸின் புதிய வசதிகள் குறித்து வெங்கட் எழுதியிருக்கிறார். சாட் ஜிபிடி குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் விதமானதொரு கட்டுரையை ஜெயந்த் சண்முகம் எழுதியிருக்கிறார். ஆழி செந்தில்நாதனின் ஐலேசா குறித்து கோகிலா எழுதியிருக்கிறார். சென்ற வாரம் இணையமெங்கும் பேசுபொருளாக இருந்த ட்விட்டர் ப்ளூ குறித்துக் குப்புசாமி எழுதியிருக்கிறார்.

சூடான் கொதிநிலையைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ராணுவத்துக்குள் மூண்ட அதிகாரப் போட்டி, உருண்டு திரண்டு இன்று மொத்த தேசத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிறது. சூடானில் என்ன நடக்கிறது என்று விரிவாக விவரிக்கிறார் வினுலா.

சூடானிலாவது ராணுவத்துக்குள் கலவரம். இந்திய மக்கள் தொகை, சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி உலக அளவில் முதலிடத்தைத் தொட்டு இங்கே நமக்களிக்கும் கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி, வேலைவாய்ப்புகள் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் துரிதமாக வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

வெனிசூலாவில், கல்வி கற்பதற்காக அபாயகரமான கானகத்தின் வழியே எல்லை தாண்டி கொலம்பியாவுக்குள் நுழையும் சிறுவர்கள் குறித்த கோகிலாவின் கட்டுரை, ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்கள் பாதியில் நின்று போவதன் அடிப்படையை விளக்கும் தயாரிப்பாளர் ராம்ஜியின் பேட்டி, உக்ரைன் ராணுவ வீரர்கள் போர்க்களத்துக்குச் செல்லும் முன்னர் விந்து வங்கியில் தமது உயிரணுக்களைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்வது குறித்த கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றி வாசிக்க நிறைய உள்ளன.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • உலகைச் சுற்றி

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

    நேர்காணல்: மனுஷ்யபுத்திரன்

    ஆளுமை

    கமலா ஹாரிஸ்: ஒரு கையில் கரண்டி, மறு கையில் அமெரிக்கா

    “காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை! அரசியல் முதல், நிறுவனங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலகின் வல்லரசின் துணை அதிபர் என்பது சாதாரணப் பதவி இல்லை. ஹிலரி...

    Read More

    நுட்ப பஜார்

    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 1

    1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும்...

    கணினி

    Refurbished Goods என்னும் கெட்ட சக்தி

    வருடம் 2015 . டெல்லியைச் சேர்ந்த சாகெத் மற்றும் அவனீத் shopclues என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும் கல்லூரிக்...

    அறிவியல்-தொழில்நுட்பம்

    ரேன்சம்வேர் என்றொரு பேரிடர்

    கடத்தி வைத்துக்கொண்டு காசு கேட்பது. இது ஆதிகாலம் முதல் நடந்துவரும் ஒரு குற்றம். இதன் டிஜிட்டல் அவதாரம் தான் ரேன்சம்வேர். தனிநபர்கள், நிறுவனங்கள்...

    தமிழ்நாடு

    சுந்தரத் தமிழும் நுட்ப தெய்வமும்

    Pots to Bots என்ற மிகப்பொருத்தமான துணைத்தலைப்பு கொண்டு நிகழ்ந்த கணித்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்தது, இந்தத்...

    நம்மைச் சுற்றி

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    error: Content is protected !!