மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக ஆலன் டுரிங் (Alan Turing) என்ற இங்கிலாந்தின் கணிதமேதை மனிதனின் குணமான சிந்திப்பதை இயந்திரத்தின் மீது பொருத்தி இயந்திரங்களால் சிந்திக்க முடியுமா என்ற கேள்வியைத் தன் ஆய்வுக் கட்டுரையில் எழுப்பினார். அக்கேள்வியின் தொடர்ச்சியாக வெவ்வேறு செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்பட்டன. மனித சிந்தனையின் ஆதாரமான மொழியை இயந்திரங்களால் மறுஆக்கம் செய்யமுடிகிறதா எனப் பலவிதமான சோதனைகள் நடைபெற்றன. அம்முயற்சியின் தற்கால விளைவே ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு மாதிரி (Artificial Intelligence Model).
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment