Home » Home 19-04-23

வணக்கம்

சரியாக ஒரு மாதம் முன்பு நாம் எதை எண்ணி, எதற்கு அச்சப்பட்டு எச்சரித்தோமோ அதை இன்று அரசே செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுதும் கோவிட் தொற்றுப் பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி. ஒய்யின் ‘மீண்டும் மீண்டும் கோவிட்’ கட்டுரை இந்தப் புதிய ரக (ஆர்க்டூரஸ்) கோவிட் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.

சென்ற வாரம் சர்வதேச மீடியாவில் உக்ரைன் போர்ச் செய்திகளைக் காட்டிலும் அதிக அளவு பேசப்பட்ட விவகாரம், சீனாவுக்கு இலங்கை அனுப்பவிருக்கிற குரங்குகள். இலங்கையில் குரங்குகள் அதிகம் என்பது எளிய புள்ளி விவரத் தகவல். சீனா அந்தக் குரங்குகளை வாங்கி என்ன செய்யப் போகிறது என்பதுதான் விவகாரமே. மிருகக் காட்சி சாலைகளில் விடப் போவதாகச் சொல்கிறார்கள். கொன்று தின்றாலுமே நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கோவிடே சீனாவின் ‘உற்பத்தி’ என்கிற கான்ஸ்பிரஸி தியரி உலகெங்கும் உலவும் வேளையில் இக்குரங்குகளை அவர்கள் ஆய்வு நோக்கில் தருவிப்பார்களென்றால் சிக்கல்தான். ஏனெனில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாகவே ஒரு குத்துமதிப்புத் தகவல்தான். உண்மை என்றுமே முழுதாக அங்கிருந்து வந்ததில்லை. ரும்மான் எழுதியிருக்கும் ‘குரங்கு பிசினஸ்’ கட்டுரை மேற்படி இரு தேசங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியை விவரிக்கிறது.

மறுபுறம், இலங்கையைத் தாக்கியிருக்கும் இன்னொரு பூதமான க்ரிப்டோ ஊழல் குறித்து (இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கூட்டணிச் சிந்தனைகள் பல தலைவர்களுக்கு மேலோங்கத் தொடங்கியிருக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை தேசிய அளவில் அமைக்க விரும்பும் அவரது முயற்சி குறித்துப் பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘கைகொடுப்போர் எத்தனை பேர்?’ ஊன்றி வாசிக்க வேண்டிய மற்றொரு கட்டுரை.

யூட்யூபில் சமையல் செய்து காட்டி சம்பாதிக்கும் இல்லத்தரசிகளைக் குறித்து நந்தினி கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரை, சென்னை தீவுத் திடலில் உருவாகியிருக்கும் டிரைவ் இன் உணவகம் குறித்து ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை, சென்னையில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் குறித்து கோகிலா எழுதியிருக்கும் கட்டுரை என இந்த இதழில் நீங்கள் ரசித்துப் படிக்க நிறைய உள்ளன.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • திசையெலாம்

    உலகம்

    ஓயா ஊழலும் தீராத நல்லுறவும்

    அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...

    உலகம்

    அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!

    திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...

    அறுசுவை

    நம் குரல்

    இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

    இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

    இந்தியா

    ஒரு நாடு, ஒரு வானம்

    நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம்...

    சுற்றுலா

    நல்லிணக்கக் குப்பைகள்

    மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும்...

    சுற்றுலா

    போரா குஹாலு: பள்ளத்தாக்கில் ஒரு புராதன உலகம்

    அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து...

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    நம் குரல்

    வாக்களிக்கும் நேரம்

    குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

    ரசித்து ருசிக்க

    ஆன்மிகம்

    வாழ வைக்கும் வசவுகள்

    பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    error: Content is protected !!