Home » Home 12-04-23

வணக்கம்

அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதவாதிகள், மடாதிபதிகள், பாதிரியார்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்பினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாகப் பெருகி வருகின்றன. இப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது கலாக்ஷேத்ரா. அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தேசம் முழுதும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. ஏனெனில், பல்லாண்டுக் காலமாக அவ்வமைப்பின் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையின் கனம் அத்தகையது. பொறியியல் படிப்புக்கு ஐஐடி எப்படியோ, நாட்டியல் கல்விக்கு கலாக்ஷேத்ரா அப்படி. உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் அங்கே வந்து பயில்வது காலம் காலமாக உள்ள வழக்கம்.

ஐஐடி வளாகத்துக்குள் நிகழும் குற்றங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கும் சூழலில் கலாக்ஷேத்ராவும் தனது புனிதப் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கி வைக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நிறுவனம் என்பதென்ன? சில தனி நபர்களால் ஆனதுதானே? குற்றவாளிகள் எங்கும் இருப்பார்கள். எத்துறையிலும் இருப்பார்கள்.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோகிலாவின் ‘கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?’ என்கிற கட்டுரை எச்சார்பும் இன்றி உண்மைகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. மீ-டூ என்பது வெறும் குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகத் தேங்கிவிடாமல் அவற்றின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமும் அவசியமும் அரசுக்கு இருக்கிறது. ஒரு கொலை அல்லது கொள்ளைச் சம்பவத்தை சாட்சிகளின் மூலமாகவும் ஆதாரங்களின் மூலமாகவும் நிரூபிக்க முடியும். பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், சுரண்டல்கள் அத்தகையவை அல்ல. சாட்சியோ ஆதாரங்களோ இல்லாத காரணத்தினாலேயே இக்குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்பிப்பது நடைமுறை ஆகிவிடக் கூடாது. அப்படித்தான் அது ஆகும் என்றால், குற்றங்கள் மேலும் பெருகவே செய்யும்.

மீ-டூ குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தண்டனைப் பரிந்துரைகள் தரவும் தனியொரு அமைப்பையே உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. அரசு ஆவன செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் கடந்த வாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய பலஸ்தீன் அல் அக்ஸா தாக்குதல் சம்பவம் குறித்து ரும்மான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்டுதோறும் ரமளான் சமயத்தில் அப்பள்ளி வாசல் வளாகத்தில் இஸ்ரேலியப் படைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தாக்குதல் நடத்துவதன் ஒரே நோக்கம், இஸ்லாமியர்களைச் சீண்டி, போருக்கு இழுப்பது மட்டும்தான். அல் அக்ஸாவில் ஒரு சிறிய தாக்குதலை மேற்கொண்டால் அங்கே காஸாவில் ஹமாஸ் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும். அதைச் சுட்டிக்காட்டி பலஸ்தீன் முஸ்லிம்களின் மீது முழுநீளத் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆண்டுதோறும் அங்கே நடப்பது.

இவ்விவகாரத்தின் ஆழம் தொட்டுப் பேசுகிற இக்கட்டுரை, அல் அக்ஸாவின் வரலாற்று முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்குகிறது.

ஸ்காட்லந்தின் புதிய முதலமைச்சராகியிருக்கும் பாகிஸ்தானி வம்சாவழியைச் சேர்ந்த ஹம்சா யூசஃப் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கும் கட்டுரை, ரஷ்யா-சீனா-சவூதி அரேபியா மூன்று நாடுகளும் கூட்டணி வைத்து அமெரிக்க டாலரைப் பின்னுக்குத் தள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, நேட்டோவில் பின்லாந்து இணைந்திருப்பதன் அரசியல் முக்கியத்துவத்தைச் சுட்டும் வினுலாவின் கட்டுரை, என்.சி.ஈ.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில அபாயகரமான திருத்தங்களைச் சுட்டிக்காட்டும் பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் கனம் கூடிய படைப்புகள் அதிகம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

உலகம் யாவையும்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

நம்மைச் சுற்றி

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

கல்வி

படிப்பு முக்கியம் பரமா! – அசத்தும் பீகார் கிராமம்

பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...

நம் குரல்

நதியும் நிதியும் மதியும்

ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...

குற்றம்

வேண்டாம் முதலிடம்!

2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான இரு நிதியாண்டுகளில் 4484 சிறை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில்...

நம் குரல்

மண், மதம், மற்றும் கொஞ்சம் அரசியல்

சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...

நம் குரல்

உரிமைப் போர்

சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...

குற்றம்

காண்டாமிருகமும் கதிரியக்கமும்

புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!