Home » home-22-002-23

வணக்கம்

தை மாதம்தான் தொடக்கம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை மாநிலமெங்கும் திருவிழாக்கள்தாம். பொதுவாக நாம் திருவிழாக்களை மதத்துடனும் வழிபாட்டுடனும் இணைப்பவர்களானாலும் அடிப்படையில் அவை நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டவைதாம். விளைச்சல்-அறுவடைக் காலத்தைத் தொடர்ந்துதான் திருவிழாக்கள் வருகின்றன. பெரிதாக அவநம்பிக்கைகள் முட்டி மோதாத காலம் வரை அது நீள்கிறது. பிறகு பிழைப்பைப் பார்க்கிறோம். அன்றாடங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறோம். மீண்டும் நம்பிக்கை துளிக்கும் காலம் வரும்போது மீண்டும் கொண்டாடத் தொடங்குகிறோம். உலகெங்கும் இதுதான் நடைமுறை.

இந்த இதழ் திருவிழாக்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. வடலூர் தைப்பூசத் திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி ஹாங்காங் பன் திருவிழா வரை பலப்பல திருவிழாக்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வேறு தேசங்கள், வேறு வேறு மதங்கள், வேறு வேறு நம்பிக்கைகள் ஆனாலும் மனிதர்கள் சில அடிப்படைகளில் வேறுபடுவதே இல்லை. கொண்டாடக் கிடைக்கும் தருணங்களைத் தவறவிடக் கூடாது என்பது அதிலொன்று. இந்தக் கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு கதையும் நமக்கு மௌனமாக போதிக்கும் உண்மைகள் பல. லயம் கூடியதொரு வாழ்வைத்தான் அனைவரும் விரும்புகிறோம். எங்கே பிசிறடிக்க விடுகிறோம் என்பதைத்தான் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சென்ற வாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட விவகாரம், பழ. நெடுமாறனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அவர் வெளியிட்ட ஒரு வரித் தகவல். தனது அறிவிப்புக்குப் பக்க பலமாக எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் அந்த ஒரு வரியை மட்டும் தனது செய்தியாகத் தந்துவிட்டுப் போனார்.

தனது கடைசி மூச்சு வரை தம் மக்களுக்காக, அவர்களது சுதந்தரத்துக்காக, உரிமைகளுக்காகப் போராடியவர் என்பதுதான் பிரபாகரனின் சிறப்பு. அவரது இயக்கம் நடத்திய அரசியல் கொலைகள், சகோதரக் கொலைகள் உள்ளிட்ட அனைத்தையும் செரித்துக்கொண்டு அவரை இன்றுவரை ஆராதிப்போருக்கு உள்ள ஒரே நியாயம் அதுதான். இறுதிவரை மக்களின் பக்கம் நின்றார்.

பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு, இறுதிப் போரில் லட்சக் கணக்கான தமிழர்களைக் காவு கொடுத்து, பிரபாகரன் மட்டும் உயிர் தப்பிச் சென்றார் என்பதைத்தான் நிறுவப் பார்க்கிறது. தமது தளபதிகளின் - ஆலோசகர்களின் நிர்ப்பந்தத்தால்தான் அவர் அப்படிச் செய்தார் என்று பழ. நெடுமாறன் சொல்கிறார். இது பிரபாகரனின் பெயரில் இன்னும் இழுக்கேற்றும் நடவடிக்கையே அன்றி வேறல்ல. அவர் என்றுமே எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தவரல்லர். அதுவும் ஓர் இனமே மொத்தமாக அழிந்துகொண்டிருந்த இறுதிக் கணங்களில் அவ்வளவு சுயநலமாக அவர் முடிவெடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

நெடுமாறனின் இந்த அறிவிப்பை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். பலதரப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. எதையும் அரசியலாக மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட சமூகம் இது. இப்பிரச்னையின் உண்மை நிலவரம் குறித்து உணர்ச்சி வயப்படாமல் அலசுகிறது, அ. பாண்டியராஜனின் கட்டுரை.

இவை தவிர இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையில் அமெரிக்காவின் நிலைபாட்டை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை, அபுதாபியில் உருவாகியிருக்கும் ஆபிரகாமிய இல்லம் என்கிற மத நல்லிணக்க வழிபாட்டுத் தலம் குறித்த நஸீமாவின் கட்டுரை, அமெரிக்காவின் சிறுபான்மை மதங்களுள் ஒன்றான ஆமிஷ் குறித்தும் அதனைப் பின்பற்றும் மக்களைக் குறித்தும் பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அண்டார்டிகாவில் (பங்களாதேஷைவிடப் பரப்பளவில் பெரிய) ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கியிருப்பதன் ஆபத்தைச் சுட்டிக்காட்டும் கோகிலா பாபுவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கருத்தூன்றிப் படிக்கப் பல கட்டுரைகள் உள்ளன.

கவிஞர் ஞானக்கூத்தன் தமது வாழ்நாளில் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான் என்றாலும் மிகச் சிறந்த கதை. மறக்க முடியாதது. அக்கதையும் அதன் நுட்பங்களைப் பேசும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.

இன்னும் சுவாரசியமான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

உலகைச் சுற்றி

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

சிறப்புப் பகுதி: திருவிழாக்கள்

திருவிழா

சூப்பர் ஹீரோ அழகர்

“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம்...

ருசிகரம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!