Home » Home 08-02-23

வணக்கம்

ஒரு நல்ல கதை உங்களை என்ன செய்யும்? சிலிர்க்கச் செய்யலாம். பேச்சற்றுப் போகச் செய்யலாம். வாய் ஓயாமல் அதைக் குறித்துக் காண்போரிடமெல்லாம் பேசச் செய்யலாம். திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கச் செய்யலாம். முகமறியாத அந்த ஆசிரியரை மானசீகத்தில் எண்ணி விழுந்து வணங்கச் செய்யுமா?

இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘யூதாஸின் முகம்’ அப்படியொரு அனுபவத்தைத் தர வல்லது. போனி சேம்பர்லின் என்கிற அந்த எழுத்தாளரைக் குறித்து கூகுளில்கூட எந்த விவரமும் கிடையாது. பெயரை மட்டும் வைத்து அவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று யூகிக்கலாமே தவிர, உண்மையிலேயே பெண்தானா என்றும் தெரியாது. எப்பேர்ப்பட்ட எழுத்து இது. எப்படி இப்படி ஒரு கதையை இவரால் எழுத முடிந்தது என்று திகைத்துத் திகைத்துத் தணிவீர்கள். படிக்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், படித்துவிட்டால் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டீர்கள். இதனை மொழிபெயர்த்து அளித்த ஆர். சிவகுமாருக்கும் இக்கதையையும் அதன் மேன்மையைச் சிலாகிக்கும் அழகான கட்டுரையையும் அளித்திருக்கும் மாமல்லனுக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.

இது பிப்ரவரி அல்லவா? காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்புக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சரவண கார்த்திகேயனும் கோகிலா பாபுவும் அவற்றை எழுதியிருக்கிறார்கள். யார் யாரோ, என்னென்னவோ, எப்படி எப்படியோ எழுதத்தான் போகிறார்கள். ஆனால் இந்த இரு பார்வைகள்-கோணங்களின் தனித்துவம் உங்களை வெகுவாகக் கவரும்.

இந்த இதழின் மிக முக்கியமான கட்டுரை அதானி என்கிற தொழிலதிபரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சித்திரிக்கும் ‘அதானி: மூன்றாம் இடத்திலிருந்து முட்டுச் சந்துக்கு’. ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டுவதுதான் சிரமம். சரியச் செய்வது மிக எளிது. உலகமே இன்று இந்தியாவை கவனிக்கிறது. இந்தச் சரிவின் காரணங்களை அலசிக்கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடவாதது போல நமது மத்திய அரசு இதனைக் கடக்கச் சொல்லலாம். ஆனால் கூடை போட்டுக் கோழியை மூடி வைப்பது போல ஒரு தேசியத் தலைக் குனிவை மறைத்து வைக்க இயலாது. நடந்த அபத்தங்களின் தொடக்கப் புள்ளி முதல் இறுதி வரை எதையும் விடாமல் அலசி ஆராய்ந்திருக்கிறார் கட்டுரையாளர் கோகிலா பாபு.

அமெரிக்க வான்வெளியில் பறந்து, வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூன் குறித்த பத்மா அர்விந்தின் கட்டுரை, கடலூரில் உள்ள ஓர் இடிந்த கோட்டையின் புதைந்த சரித்திரத்தைத் தேடி எடுக்கும் ஶ்ரீதேவி கண்ணனின் கட்டுரை, ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதிக்குச் சென்று பிரச்னையை மேலும் ஊதிப் பெரிதாக்கியிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயல்பாட்டை முன்வைத்து இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் இன்றைய கொதிநிலையை ஆராயும் நஸீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றிப் படிக்க ஏராளமாக உள்ளன.

இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் நமது சந்தாதாரராக்குங்கள். மேலும் சிறந்த பல கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

வெளி உலகம்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

உள் உலகம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

கல்வி

படிப்பு முக்கியம் பரமா! – அசத்தும் பீகார் கிராமம்

பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...

மேலும் ரசிக்க

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!